AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேரளாவில் புதிய சாதனைப் படைத்தது சூர்யாவின் கருப்பு படம் – மகிழ்ச்சியில் படக்குழு

Karuppu Movie Kerala Box Office Collection Update | நடிகர் சூர்யாவின் படங்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எவ்வளவு கொண்டாடுகிறார்களோ அதே போல மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் சூர்யாவின் கருப்பு படம் புதிய சாதனையை படைத்துள்ளது.

கேரளாவில் புதிய சாதனைப் படைத்தது சூர்யாவின் கருப்பு படம் – மகிழ்ச்சியில் படக்குழு
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 May 2026 19:36 PM IST

நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கியது மட்டும் இன்றி படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்து உள்ளார்.. இந்தப் படம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து பல சிக்கல்களை சந்தித்தது. மேலும் படத்தின் ஷூட்டிங்க் தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் பல தடைகளை தாண்டி கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026 ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. உலக அளவில் இந்தப் படம் திரையரங்குகளில் தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றது. மாடர்ன் சாமி படமாக வெளியாகி உள்ள இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்த பலர் சாமி ஆடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தப் படம் வெளியானதில் இருந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கருப்பு படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் புதிய சாதனைப் படைத்தது சூர்யாவின் கருப்பு படம்:

தமிழ் சினிமாவில் சூர்யாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அதே போல மலையாள சினிமாவிலும் சூர்யாவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். இதன் காரணமாகவே சூர்யாவின் படங்கள் அதிக அளவில் மலையாள சினிவில் வெளியாவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது சூர்யாவின் நடிப்பில் வெளியான கருப்பு படம் மலையாள சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் மலையாள சினிமாவில் இதுவரை வெளியான சூர்யா படங்களில் அதிக வசூல் செய்த படமாக இந்த கருப்பு படம் உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Karthi: ரவி ஷூட்டிங்கில் எப்போதுமே அப்டித்தான்.. கலகலப்பாக கார்த்தி சொன்ன விஷயம்!

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தீபாவளியை குறி வைக்கும் சிலம்பரசனின் அரசன் படக்குழு… வைரலாகு ரிலீஸ் அப்டேட்!

Follow Us