AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என் இனிய பொன் நிலாவே… இளையராஜாவுக்கு சொந்தம் கிடையாது – நீதிமன்றம் பரபரப்பு கருத்து

என் இனிய பொன் நிலாவே பாடலை இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களின் ஒட்டுமொத்த உரிமையும் படத்தின் தயாரிப்பாளரையே சாரும். எனவே இளையராஜா உரிமை கொண்டாட முடியாது என தெரிவித்துள்ளது.

என் இனிய பொன் நிலாவே… இளையராஜாவுக்கு சொந்தம் கிடையாது – நீதிமன்றம் பரபரப்பு கருத்து
இளையராஜா
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 May 2026 19:04 PM IST

என் இனிய பொன் நிலாவே பாடலை இளையராஜா உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. பாலுமகேந்திரா இயக்கத்தில் பிரதாப் போத்தன், ஷோபா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான படம் மூடுபனி. இளையாராஜாவின் 100வது படமாக வெளியான இந்தப் படத்தில் இடம் பெற்ற என் இனிய பொன் நிலாவே பாடல் 4 தசாப்தங்களை கடந்தும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இளையராஜாவின் மேடை நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம் பெறும். இந்த நிலையில் இந்த பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு எதிராக சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

‘பாடல் இளையராஜாவுக்கு சொந்தம் கிடையாது’

இந்த நிலையில் இந்த வழக்கு மே 21, 2026 அன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளது. அதன் படி, காப்புரிமை சட்டத்தின் படி ஒரு பாடலின் இசை மற்றும் மெட்டுக்கள் தான் இசையமைப்பாளருக்கு சொந்தம், அதில் வரும் வரிகளோ அல்லது இறுதி ஒலிப்பதிவோ இசையமைப்பாளருக்கு சொந்தம் கிடையாது என தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லை.. அப்போ எப்போது தெரியுமா?

மேலும், காப்புரிமை சட்டப்பிரிவு 2(F)ன் படி திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களின் ஒட்டுமொத்த உரிமையும் படத்தின் தயாரிப்பாளரையே சாரும். எனவே இளையராஜா உரிமை கொண்டாட முடியாது. என தெரிவித்துள்ளது. இது இளையராஜா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள கருப்பு படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான போராடடா பாடல் தவறாக பயன்பபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இளையராஜாவின் காப்புரிமை குறித்த போராட்டத்தை தவறாக சித்தரித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிக்க : சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜான் – வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கருப்பு படத்தை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்படடிருந்தது. அதில், மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு, கருப்பு திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு. 50 வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.
உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us