சிரஞ்சீவி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜான் – வைரலாகும் வீடியோ
Anaswara Rajan comes on board Chiranjeevis 158 | மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை அனஸ்வரா ராஜன். அதன்படி இவர் தற்போது நடிகர் சிரஞ்சீவி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை அனஸ்வரா ராஜன். இவர் தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில் பிறகு நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த நடிகை அனஸ்வரா ராஜன் தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வித் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார்.
அதற்கு முன்னதாக நடிகை அனஸ்வரா ராஜன் த்ரிஷா கிருஷ்ணனின் நடிப்பில் வெளியான ராங்கி என்ற படத்தில் த்ரிஷாவின் அண்ணன் மகளாக நடித்து இருந்தார். இந்த நிலையில் இவர் நாயகியாக நடித்த வித் லவ் படமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடிகை அனஸ்வரா ராஜன் தற்போது படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.




மெகா 158 படத்தில் இணைந்த நடிகை அனஸ்வரா ராஜன்:
அதன்படி நடிகை அனஸ்வரா ராஜன் தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிரஞ்சீவியின் 158-வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் தயாரித்து உள்ள நிலையில் இயக்குநர் பாபி கொல்லி எழுதி இயக்க உள்ளார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கிய நிலையில் நடிகர் பவன் கல்யாண் இந்தப் படத்தினை தொடங்கி வைத்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை அனஸ்வரா ராஜன் இணைந்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Ilaiyaraaja: காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை.. இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கருப்பு படக்குழு!
மெகா 158 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A new wave of charm joins the MEGA storm 🌪️❤️🔥
Welcoming the lovely #AnaswaraRajan to the world of #Mega158 💥#KVNTeluguDebut – #ChiruBobby2 Launched Grandly 🔥
A @dirbobby Film 🪓
Megastar @KChiruTweets #VenkatKNarayana @MusicThaman @vijaykartikdop @AntonyLRuben @artkolla… pic.twitter.com/xBmHzSlpFH
— KVN Productions (@KvnProductions) May 21, 2026
Also Read… Peddi: மல்யுத்த வீரனாக ராம் சரண்.. ரசிகர்களை கவர்ந்துவரும் பெத்தி படத்தின் அதிரடி ட்ரெய்லர்!