AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு

Arjun Das Concity Movie Release Date Out Now | நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள் படம் கான் சிட்டி. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு
கான் சிட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 May 2026 15:02 PM IST

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவராக வலம் வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் இவர் நாயகனாக நடித்து பிரபலம் ஆவதற்கு முன்னதாக இவர் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக வில்லன் நடிகருக்கு இத்தனை பெண் ரசிகைகளா என்று கூறும் அளவிற்கு மிகவும் பிரபலமானவராக இருந்தார் அர்ஜூன் தாஸ். இதன் காணமாகவே அடுத்தடுத்து இவர் நாயகனாக நடித்தப் படங்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியது. தொடர்ந்து நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் எல்லாவிதமான கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

அதன்படி நடிகர் அர்ஜுன் தாஸ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தெலுங்கு சினிமாவில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான தே கால் ஹிம் ஓஜி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் அடுத்ததாக நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கான் சிட்டி.

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்து உள்ள கான் சிட்டி படத்தை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி உள்ளார். இது அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் ஆகும். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக நடிகை அன்னா பென் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு மற்றும் வடிவுகரசி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜுன் மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Ilaiyaraaja: காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை.. இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கருப்பு படக்குழு!

கான் சிட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Peddi: மல்யுத்த வீரனாக ராம் சரண்.. ரசிகர்களை கவர்ந்துவரும் பெத்தி படத்தின் அதிரடி ட்ரெய்லர்!

Follow Us