சூர்யா பிறந்த நாள் ஸ்பெஷலாக ஒரு அப்டேட் கொடுக்கும் சூர்யா 47 படக்குழு?
Suriya 47 Movie First Look Poster Update | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ளவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள 47-வது படத்தின் முதல் பார்வை எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட் தற்போது வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராகவும் திரைக்கதை ஆசியராகவும் வலம் வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவரது இயக்கத்தில் மற்றும் திரைக்கதை ஆசிரியாராகவும் தொடர்ந்து படங்களில் பணியாற்றி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். அதன்படி அந்தப் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கிய ஆவேஷம் படம் மலையாள சினிமாவில் வெளியாகி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இந்தப் படத்தில் கேங்ஸ்டராக உள்ள ஃபகத் பாசில் முதல் பாதி படம் வரை காமெடி கேங்ஸ்டர் மாதிரி காட்டப்பட்டு பிறகு அவரது பில்டப்புகளில் அவர் எவ்வளவு பெரிய கேங்ஸ்டர் என்று தெரியவரும்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்து இருந்த போது அவர் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் 47-வது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகின்றது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.




இந்த மாதம் சூர்யா 47 படத்திலிருந்து வெளியாகும் முக்கிய அப்டேட்:
இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பான அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. அந்த பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா 47 படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… Dhanush: வெங்கட் பிரபுவுடன் கூட்டணி..? புது பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As Per VP,#Suriya is currently shooting for #SURIYA47, directed by Jithu Madhavan.
The makers are planning to unveil the first look on July 23, coinciding with Suriya’s birthday. However, with #JanaNayagan also scheduled for release on the same day, there is a possibility that… pic.twitter.com/s53QMQOdQf
— Movie Tamil (@_MovieTamil) July 8, 2026
Also Read… ஜன நாயகன் பட விநியோகஸ்தர்களுக்கு தளபதி விஜய் போட்ட கண்டிஷன்? வைரலாகும் தகவல்