நஸ்லேனின் சிறப்பான நடிப்பில் இது ஒரு மாஸ்டர்பீஸ்… ஓடிடியில் வெளியாகி உள்ள மாலிவுட் டைம்ஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Mollywood Times Movie OTT Review Here | மலையாள சினிமாவில் தற்போது பிரபலமான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் நஸ்லேன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற மாலிவுட் டைம்ஸ் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் நஸ்லேன். இவர் மலையாள சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பிறகு நாயகன்களின் நண்பனாக நடித்து வந்த இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். நடிகர் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ இருவரும் இணைந்து நடித்து மாபெரும் வெற்றிப் பெற்றப் படம் பிரேமலு. இந்தப் படத்தின் வெற்றி இவர்கள் இருவரின் சினிமா வாழ்க்கையும் வேற ஒரு உட்சத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். அந்த வகையில் மமிதா தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்தால் நஸ்லேன் மலையாள சினிமாவில் தொடர்ந்து பிசியான நாயகனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நஸ்லேன் நடிப்பில் கடந்த 5-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மாலிவுட் டைம்ஸ். சைக்காலஜிகள் டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் அபிநவ் சுந்தர் நாயக் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.
நஸ்லேனின் மாலிவுட் டைம்ஸ் படத்தின் கதை என்ன?
கேரளாவில் உள்ள குட்டிகானம் என்ற பகுதியில் பிறந்த சிறுவன் வினித் மாதவன் சிறு வயதில் இருந்தே ஹாரர் மற்றும் திரில்லர் தொடர்பான புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கையின் லட்சியமாக அவன் ஒரு சிறந்த ஹாரர் பட இயக்குநராக மலையாள சினிமாவை அடுத்த தரத்திற்கு உயர்த்தும் இயக்குநராக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறான்.




Also Read… சிறுத்தை படத்தில் நடித்த சிறுமியா இது.. இப்போ ஆளே மாறிட்டாங்க பாருங்களே!
வினித் மாதவனின் குடும்பமோ ஒரு மிடில் கிளாஸ். அதனால் இது எல்லாம் நமது வாழ்க்கைக்கு ஒத்துவராது என்று கூறியும் தனது கனவை நோக்கியே பயணிக்கிறார் வினித் மாதவன். பள்ளி கல்வியை முடித்துவிட்டு கல்லூரியில் விஸ்காம் படிப்பை தேர்வு செய்து படிக்கும் வினித் மாதானின் குறும்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகின்றது.
அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் பெரிய ஹாரர் பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த வினித் மாதவன் மக்களை பயத்தில் சாகும் அளவிற்கு ஒரு ஹாரர் படத்தை இயக்கினாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… Priyamani: ஜன நாயகன் பட ரிலீஸ் இந்த மாதத்தில் இருக்கும் – அப்டேட் கொடுத்த பிரியாமணி!