நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்… முதல்வர் ஜோசப் விஜய் நேரில் விசிட்.. குடிநீரை குடித்து பார்த்து ஆய்வு!
CM Vijay inspected Nemmeli : செங்கல்பட்டு மாவட்டத்தில் நெம்மேலியில் செயல்பட்டு வரும் குடிநீரை நன்னிராக்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது, குடிநீரை குடித்து பார்த்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டிருந்தார் .
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு முதல்வர் ஜோசப் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 110 மில்லியன் லிட்டர் மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட இரு கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். தொடர்ந்து நெம்மேலி திட்டத்தின் குடிநீரை குடித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும், கடல் நீர் உறிஞ்சப்படும் தொழில்நுட்பம் முதல் அது சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் வரையிலான ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் சென்னை மாநகருக்கு தினசரி குடிநீர் விநியோக அளவு திருப்திகரமாக உள்ளதா என்பதை முதல்வர் ஜோசப் விஜய் நேர்முகமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கட்டுமான பணி ஆய்வு
இந்த ஆய்வை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைய உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கட்டுமான பணிகளையும் முதல்வர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இங்கிருந்து தினந்தோறும் சுமார் 400 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் அதிநவீன திறன் கொண்ட இந்த திட்டத்திற்கு, கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டில் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.
மேலும் படிக்க: திமுகவுக்கு வா.. இல்லையெனில் அழித்துவிடுவோம்.. தவெக எம்எல்ஏவுக்கு பகிரங்க மிரட்டல் பேரம்.. பரபரப்பு ஆடியோ வெளியீடு!




ரூ.4,276 கோடி மதிப்பீட்டில் கட்டட பணி
இந்த நிலையில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் ரூ.4,276 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த மாபெரும் உள்கட்டமைப்பு திட்டத்தின் கட்டுமான பணிகள் நிலையை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இந்த பணிகள் எந்த அளவில் நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் உள்ள சவால்கள் என்ன என்பது தொடர்பாக அங்கிருந்த வரைபடங்கள் மற்றும் மாதிரிகள் மூலம் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
திட்டத்தை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
அப்போது, சென்னை மாவட்டத்தின் எதிர்கால குடிநீர் தேவையை தீர்க்கும் இந்த மிக முக்கிய திட்டத்தின் இந்திய பணிகளை எந்தவிதமான தாமதமும் இன்றி, குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார். முதல்வரின் இந்த திடீர் கள ஆய்வு மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: ஆடு திருடிய வழக்கறிஞருக்கு அரசுப் பதவி வழங்கியது நியாயமா முதல்வரே? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!