பட்ஜெட் விலையில் குளு குளு பயணம்.. வருகிறது 2 ஆயிரம் அரசு மின்சார ஏசி பேருந்துகள்.. முழு விவரம் உள்ளே!
Tamil Nadu Electric AC Buses: தமிழகத்தில் 2 ஆயிரம் குளிர்சாதன வசதி உடைய மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான டெண்டர் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வருவாயை பெருக்குவதற்கும், பொது மக்களின் பயண வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் ஏசி பேருந்துகளை இயக்கும் புதிய தொலைநோக்கு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 3 மாதங்களுக்குள் புதிதாக 2 ஆயிரம் குளிர்சாதன வசதி உடைய மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வாங்கும் குளிர்சாதன வசதி உடைய மின்சார பேருந்துகளில் பல்வேறு வசதிகள் இடம் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ.பயணம்
இந்த வகை பேருந்துகளானது ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தால் சுமார் 300 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் வசதி கொண்டவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பேருந்துகள் முழுக்க முழுக்க மின்சாரம் மூலம் இயங்குவதால் காற்று மாசுபாடு மற்றும் சத்தம் இல்லாத அமைதி பணம் பொது மக்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதாரண வகை பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பேருந்துகளுக்கு பதிலாக, மின்சார பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், குளிர்சாதன வசதி உடைய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: போலி ஆவணங்கள் மூலம் தனியார் வங்கியில் ரூ.80 லட்சம் மோசடி.. மேலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது!




குளிர்சாதன பேருந்துகளில் உள்ள வசதிகள் என்னென்ன
- அதி நவீன குளிர்சாதன வசதி.
- சாய்வான இருக்கைகள்.
- யு.எஸ்.பி. போர்ட்
- பயணிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள்.
- பாதுகாப்பு மற்றும் அவசர கால வழிகள்.
- தீயணைப்பு கருவிகள்.
- அவசரகால பொத்தான்கள்.
- எல்.இ.டி. டிஸ்ப்ளே.
சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் ஏசி பேருந்துகள்
உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த வகை குளிர்சான பேருந்துகளில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளானது சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குளிர்சாதன வசதி உடைய பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ஏதுவாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது சுமார் 2 ஆயிரம் குளிர்சாதன வசதி உடைய பேருந்துகள் வாங்குவதற்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வாட்ஸ் ஆப் DP-யை மாற்றி வலை.. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் மோசடி முயற்சி!