திமுகவுக்கு வா.. இல்லையெனில் அழித்துவிடுவோம்.. தவெக எம்எல்ஏவுக்கு பகிரங்க மிரட்டல் பேரம்.. பரபரப்பு ஆடியோ வெளியீடு!
Srivaikuntam Tvk Mla Viji Saravanan: தமிழக வெற்றி கழகத்தின் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ விஜி சரவணனிடம் திமுகவை சேர்ந்த நபர்கள் பேரம் பேசியதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும், இது தொடர்பான ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஆக இருந்து வருபவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த விஜி சரவணன். இவரது செல்போனுக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்தது. அதில், தொடர்பு கொண்ட நபர் தான் திமுக எம்எல்ஏவின் ஆதரவாளர் என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையுமாறு விஜி சரவணனை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ விஜி சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி திமுகவின் எம்எல்ஏவான அனிதா ராதா கிருஷ்ணன் ஆதரவாளர் என கூறிக்கொண்டு முத்துராமன் என்பவர் எனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வெளியேறி திமுகவில் இணையுமாறு கூறினார். இதற்காக ரூ.50 கோடி வரை தருவதாக தெரிவித்தார். ஆனால், நான் அதனை ஏற்க மறுத்து விட்டேன்.
பேரத்துக்கு இணங்காவிட்டால் என்ன செய்வோம் தெரியுமா
இதனால், அந்த நபர் பேரத்துக்கு இணங்காவிட்டால் என்ன செய்வோம் என்று தெரியாது என்று மிரட்டினார். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு நான் எனது காரில் சென்ற போது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில், திமுகவினர் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் எனது வெற்றியால் திமுக, அதிமுக, பாஜக இணைந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதே போல, பலர் என்னை தொடர்பு கொண்டு ரூ.30 கோடி முதல் ரூ.100 கோடி வரை தருவதாக கூறுகின்றனர்.




மேலும் படிக்க: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேர வழக்கு.. அடுத்ததடுத்து கைதாகும் நபர்கள்.. திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி!
திமுகவுக்கு வரவில்லையெனில் அழித்துவிடுவோம்
இல்லையெனில், இப்படித்தான் செய்வோம். இது தென் மாவட்ட அரசியல். தமிழகத்தில் இருக்கும் பணக்காரர்களில் 60 சதவீதம் பேர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். நான் அடிமட்டத்தில் இருந்து எம்எல்ஏ ஆனதால் அதிகமாக அழுத்தம் தருகின்றனர். அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ வின் ஆதரவாளர்கள் 4 பேர் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். திமுகவுக்கு வந்துவிடு இல்லை எனில் அழித்து விடுவோம்.
குதிரை பேரம் நடத்துகிறார்கள், குதிரை ஓட்டம் ஓடுகிறார்கள் என தொடர்ந்து பேசி வந்த திமுகவிலிருந்து தன்னை தொடர்புக்கொண்டு, MLA பதவியை ராஜினாமா செய்துவிடும்படி பேரம் பேசியது தொடர்பான ஆடியோவை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க MLA சரவணன் வெளியிட்டுள்ளார். இதுதான் திமுகவின் லட்சணம். #DMK #TVKVijay pic.twitter.com/otAlynDIet
— Harish M (@chnmharish) July 6, 2026
பேரம் பேசிய ஆடியோ – புகைப்பட வெளியீடு
மேலும், தன்னிடம் பேரம் பேசியதாக கூறப்படும் அவரின் புகைப்படம் மற்றும் அவர் பேசிய ஆடியோ ஆகியவற்றை ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ விஜி சரவணன் வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் பேரம் பேசியதாக புகார் எழுந்த நிலையில், தற்போது மற்றொரு தவெக எம்எல்ஏ பேரம் புகாரை முன் வைத்துள்ளார்.
மேலும் படிக்க: வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!