AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: தமிழ் திரைப்பட விநியோகஸ்தரர்களை சந்தித்த ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம்.. என்ன நடந்தது தெரியுமா?

KVN Productions deal: 2026ம் ஆண்டில் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்களும் பெருமாளும் எதிர்பார்த்த படம் ஜன நாயகன். இந்த படமானது சென்சார் மற்றும் பலப் பிரச்சனைகளை சந்தித்து இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் ஜன நாயகன் படக்குழு தமிழ் திரைப்பட விநியோகஸ்தரர்களை சந்தித்து பேசியுள்ளார்களாம். அந்த கலந்துரையாடலில் என்ன நடந்தது என விவரமாக பார்க்கலாம்.

Jana Nayagan: தமிழ் திரைப்பட விநியோகஸ்தரர்களை சந்தித்த ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம்.. என்ன நடந்தது தெரியுமா?
வெங்கட் நாராயணா மற்றும் முதல்வர் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Jul 2026 20:24 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயக்கங்க இருந்து, தற்போது தமிழக முதல்வராக மக்களால் அங்கீகாரம் பெற்றவர் தளபதி விஜய் (CM Vijay). இவர் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்துவந்த நிலையில், தற்போது முழுமையாக அரசியலில் இறங்கியுள்ளார். இவர் தற்போது தமிழக முதலமைச்சராக தனது அரசியல் மற்றும் மக்களுக்கான சேவைகளை சிறப்பாக செய்துவருகிறார். சினிமாவில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாக தயாரான படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்றுவரையிலும் வெளியாகவில்லை. இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 7 மாதத்தை நெருங்கிய நிலையில், இன்னும் சென்சார் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

அந்த விதத்தில் இப்படத்திற்காக முதலீடு போட்டு பல விநியோகஸ்தரர்கள் தங்களின் பணத்தை கொடுத்த நிலையில், படம் வெளியாகாமல் இருந்தது. அந்த விதத்தில், சமீபத்தில் ஜன நாயகன் தயாரிப்பு நிறுவன குழு திரைப்பட விநியோகஸ்தரர்களை சந்தித்து பேசியுள்ளார்களாம்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ‘Hangova’ என்ற முதல் பாடல் வீடியோ வெளியீடு!

திரைப்பட விநியோகஸ்தரர்களை சந்தித்த ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனம்:

அந்த சந்திப்பில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் தமிழக விநியோகஸ்தரர்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளார்களாம். பட ஒத்திவைக்கப்பட்டதா, விநியோகஸ்தரர்களுக்கு வாங்கி வட்டியை தயாரிப்பு நிறுவனம் ஏற்குமாம். ஏற்கனவே இருந்த ஒப்பந்தம் ரூ 105 கோடியாக இருந்த நிலையில், அதை ரூ 90 கோடிக்கு மாற்றவுள்ளார்களாம். மேலும் விநியோகக் கமிஷனை 12%-லிருந்து 8%-ஆகக் குறைக்க வேண்டும் என்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் கோரிக்கை விடுத்தது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்திற்கு எப்போது சென்சார் சான்றிதழ் கிடைக்கும்? வைரலாகும் தகவல்

மேலும் விநியோகஸ்தர்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். ஜன நாயகன் படமானது விநியோக தொகையை வசூலிக்க தவறினால், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் டாக்ஸிக் படத்தின் மூலமாக அவர்களின் இழப்பீட்டை வழங்கும் என அண்ட் சந்திப்பில் கலந்துரையாடியுள்ளார். இதற்கு விநியோகஸ்தரர்களும் உறுதியளித்துள்ளார்களாம்.

ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் விநியோகஸ்தரர்களை சந்தித்தது குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

தற்போது ஜன நாயகன் படத்திற்கு சென்சார் குழு ஏ தரச் சான்றிதழை வழங்க முடிவு செய்துள்ளாராம். அதன் காரணமாக இப்படத்தில் கிட்டத்தட்ட 13 கட் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அந்த கட் மாற்றப்பட்டு மீண்டும், படக்குழு காண்பித்தாள் அதிகாரப்பூர்வ சென்சார் சான்றிதழ், தணிக்கைக் குழுவின் இணையதளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us