பவர் பேக் ஆக்ஷன்.. தனது 38வது படத்திற்கு மாஸாக தயாராகும் அருண் விஜய்!
Arun Vijay 38: கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அருண் விஜய். இவர் இறுதியாக ரெட்ட தல என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின், இவர் தற்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில், தனது 38வது படத்தில் இணைந்துள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு மாஸாக தயாராகும் போட்டோவை அவர் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அருண் விஜய் (Arun Vijay) தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருகிறார். சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாகவும், படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். இவர் இறுதியாக ரெட்ட தல (Retta Thala) என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியானது. இதில் அவருடன் நடிகை சித்தி இத்னானி இணைந்து நடித்திருந்தார். இப்படமானது அவருக்கு கலவையான வரவேற்பையே கொடுத்திருந்தது. இப்படத்திற்கு பிறகு, எந்த இயக்குநரின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இயக்குநர் முத்தையாவுடன் (Muthaiah) தனது 38வது படத்தில் இணைந்துள்ளார். இப்படமானது கிராமத்து அதிரடி கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை மிர்னா மேனன் (Mirnaa Menon) நடித்துவருகிறார்.
இவர் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இதற்காக அருண் விஜய் மாஸாக தயாராகிவருகிறார். மேலும் ஷூட்டிங் தற்போது எங்கு நடக்கிறது எனவும் அப்டேட் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: ஜன நாயகன் படத்திற்கு எப்போது சென்சார் சான்றிதழ் கிடைக்கும்? வைரலாகும் தகவல்
முத்தையா இயக்கத்தில் இணைந்து நடிக்கும் அருண் விஜய்:
அருண் விஜய் தனது 38வது படத்தில் இயக்குநர் முத்தையாவுடன் இணைந்திருக்கிறார். இப்படம் முற்றிலும் ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் ஒரு கிராமிய படமாகும். இதில் அருண் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறாராம்.
இதையும் படிங்க: வாட்ஸ் ஆப் DP-யை மாற்றி வலை.. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் மோசடி முயற்சி!
இதற்காக அவர் தலைமுடியை நீளமாக வளர்த்துவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலி பகுதியில் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக தனது உடலை தயார்செய்வது குறித்து அருண் விஜய் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தனது 38வது திரைப்படம் குறித்து நடிகர் அருண் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
All pumped up for the ongoing power packed action schedule for #AV38 !! 💪🏽💥#directormuthaiya #thirunalveli pic.twitter.com/aSIb7VSGqy
— ArunVijay (@arunvijayno1) July 6, 2026
இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாம். இன்னும் திருநெல்வேலியில் சில காட்சிகள் எடுக்கப்படவேண்டிய நிலையில், பின் படத்தின் பாடல்கள் ஷூட்டிங்கும் நடைபெறவுள்ளதாம். இப்படத்தை 2026ம் ஆண்டிற்குள் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.