Arun Vijay: புது படத்திற்காக நியூ லுக்கில் அருண் விஜய்.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!
Arun Vijays Majestic New look: தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்க இருந்து வருபவர் அருண் விஜய். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் தனது புதிய திரைப்படத்திற்காக அருண் விஜய், நியூ கெட்டப்பில் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
நடிகர் அருண் விஜய் (Arun Vijay) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக “ரெட்ட தல” (Retta Thala) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், இதில் அவர் ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படமானது இவருக்கு பெரும் எதிர்பார்ப்பை கொடுத்த நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து எந்த இயக்குநரின் இயக்கத்தில் இவர் நடிக்கிறார், யார் படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் இணையத்தில் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
இதற்கு மத்தியில், சமீபத்தில் அருண் விஜய் வெளியிட்டிருந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. தலையில் நீளமாக முடி வளர்த்தும், தாடியை ஷேவ் செய்து மீசையை மட்டும் வைத்திருக்கும் கம்பீரமான தோற்றத்தில் உள்ள புகைப்படங்களை அருண் விஜய் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போட்டோஸ் அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: எனக்கு என்னிடம் அந்த விஷயம் ரொம்பவே பிடிக்கும்.. அதுவே எனது பலம் – பூஜா ஹெக்டே!
நடிகர் அருண் விஜய் வெளியிட்ட நியூ லுக் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
அருண் விஜய்யின் புதிய படம் யாருடன் தெரியுமா:
நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 படங்கள் வெளியாகியிருந்தது. இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படமானது 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும், தனுஷின் இயக்கத்தில் வில்லனாக நடித்த இட்லி கடை படம் அக்டோபர் மாதத்திலும் மற்றும் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் வெளியான ரெட்ட தல படம் 2025 டிசம்பர் மாதத்திலும் வெளியாகியிருந்தது. இப்படங்களை தொடர்ந்து அருண் விஜய், தற்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவருகிறாராம்.
இதையும் படிங்க: பிச்சைக்காரன் படம் போல நூறு சாமி படமும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் – இயக்குநர் சசி!
இப்படமானது கிராமப்புற ஆக்ஷன் மற்றும் அதிரடி கதைக்களத்தில் தயாராகிவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்திற்காகதான் அருண் விஜய், தாடி மற்றும் மீசை என கம்பீரமான தோற்றத்தை வைத்துவருவதாக கூறப்படுகிறது. இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் எப்போதும் சோஷியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்துவரும் நிலையில், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துவருகிறார். இது அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.