Arun Vijay: செக்கச் சிவந்த வானம் படத்தில் அவர்தான் எனது வேடத்தில் நடிக்கவேண்டியது – அருண் விஜய் ஓபன் டாக்!
Arun Vijay About CCV Movie: நடிகர் அருண் விஜய் சினிமாவில் தொடர்நது கதாநாயகனாகவும் மற்றும் படங்களில் வில்லனாகவும் நடித்த்து வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் செக்கச் சிவந்த வானம். இந்த படத்தில் இவரின் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அருண் விஜய் (Arun Vijay). இவரின் முன்னணி நடிப்பில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் வில்லனாக நடித்திருக்கும் படம்தான் இட்லி கடை (Idili Kadai). நடிகர் தனுஷின் (Dhanush) முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய் நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பில் புதிதாக ரெட்ட தல (Retta Thala) என்ற திரைப்படமும் தயாராகிவருகிறது. இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் இவர் நடித்த திரைப்படம்தான் செக்கச் சிவந்த வானம் (Chekka Chivantha Vaanam). இந்த படத்தில் அருண் விஜயுடன், விஜய் சேதுபத்தில், சிலம்பரசன் அரவிந்த் சுவாமி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 7 வருடங்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பாவின் இடத்துக்கு ஆசைப்படும் மகன்கள் தொடர்பான கதைக்களத்தில் இந்த படமானது வெளியாகியிருந்தது. இதில் அருண் விஜய் , தியாகராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.




இதையும் படிங்க : இதுதான் கடைசி வார்னிங்… தவறான செய்திகள் பரப்புவர்கள் மீது மகிமா நம்பியார் காட்டம்
இந்த கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் என்பது பற்றி அருண் விஜய் ஓபனாக கூறியுள்ளார். அருண் விஜய்யின் வேடத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் ஃபகத் பாசில்தான்.
செக்கச்சிவந்த வானம் திரைப்படம் குறித்து அருண் விஜய் பேசிய விஷயம்:
சமீபத்தில் இட்லி கடை படம் தொடர்பாக பேசிய நேர்காணல் ஒன்றில் நடிகர் அருண் விஜய், “செக்கச்சிவந்த வானம் படத்தில் முதன்முதலில் நடிகர் ஃபகத் பாசில்தான் நடிக்கவிருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு தேதி இல்லையா? அல்லது வேற எதுவோ பிரச்சனையா என தெரியல, அவர் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார். மேலும் எனது கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் விலகியதைத் தொடர்ந்து, வேறு நடிகரை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டனர்.
இதையும் படிங்க : சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம்.. முதல் இரு படங்கள் இதுதான்!
செக்கச் சிவந்த வானம் படம் தொடர்பாக அருண் விஜய் பேசிய வீடியோ :
#ArunVijay Recent
– In #ChekkaChivanthaVaanam, #FahadhFaasil was supposed to play my role.
– Due to some reasons, he was not able to take on that role, so I am onboarding it.#IdliKadai | #ManiRatnampic.twitter.com/STMn2OClCb— Movie Tamil (@_MovieTamil) September 30, 2025
அதில் பலரும் என்னுடைய பெயரை சொல்லியிருக்கிறார்கள், அருண் விஜய் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் நானும் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் இணைந்தேன் என நடிகர் அருண் விஜய் அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.