இதுதான் கடைசி வார்னிங்… தவறான செய்திகள் பரப்புவர்கள் மீது மகிமா நம்பியார் காட்டம்
Mahima Nambiar: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என்று தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் மாறி மாறி படங்களில் நடித்து வருகிறார். இவரைக் குறித்து தொடர்ந்து தவறான செய்திகள் பரவி வருவதால் அதுகுறித்து அவர் பேசியது வைரலாகு வருகின்றது.

மலையாள சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான காரியஸ்தன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை மகிமா நம்பியார் (Actress Mahima Nambiar). இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் பலப் படங்களில் நடித்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான சாட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன்படி பள்ளி மாணவியாக நடிகை மகிமா நம்பியார் நடித்து தமிழ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியான என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்தினை, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜெய், மகாமுனி, அசுரகுரு, ஓ மை டாக், ஐங்கரன், சந்திரமுகி 2, ரத்தம், 800, நாடு என தொடர்ந்து தமிழில் பலப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மட்டும் இத்தனைப் படங்களில் நடித்த நடிகை மகிமா நம்பியார் மலையாள சினிமாவிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் சூரியின் நடிப்பில் உருவாகி வரும் மண்டாட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை மகிமா நம்பியார் நடித்து வருகிறார்.
தவறான செய்திகள் பரப்புவர்கள் மீது மகிமா நம்பியார் காட்டம்:
இந்த நிலையில் நடிகை மகிமா நம்பியார் குறித்து தொடர்ந்து யூடியூப் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பலர் தவறான செய்திகளைப் பரப்பி வருவதாகவும் இதுவரை அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்த நான் இனி அப்படி இருக்க மாட்டேன். இதுதான் கடைசி வார்னிங். என்னைக் குறித்து தவறான செய்திகள் பரப்புவோர் மீது வழக்கு போடப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… OG படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு – நெகிழ்ந்த பிரியங்கா மோகன்
நடிகை மகிமா நம்பியார் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… அசுரன் படத்தில் கென் கருணாஸ் காட்சிகர் ரீ ஷூட் செய்யப்பட்டது – ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன விசயம்