Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

The Raja Saab: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி ராஜா சாப். சூப்பர் நேச்சுரல் கதையைமையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு
தி ராஜா சாப்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Sep 2025 13:18 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ் (Actor Prabhas). தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் வெளியான பாகுபலி படம் உலக அளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவக்கியது என்றே சொல்லலாம். தற்போது பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் இணைந்து ஒரே படமாக வெளியிடும் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் பிரபாஸின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இறுதியாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் கல்கி 2898 ஏடி.

இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் பிரபாஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தி ராஜா சாப்.

தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ:

ரொமாண்டிக் ஹாரர் காமெடிப் படமாக உருவாகியுள்ள இந்த தி ராஜா சாப் படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இனைந்து நடிகர்கள் சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், போமன் இரானி, ஜரீனா வஹாப், சமுத்திரக்கனி, வெண்ணெலா கிஷோர், பிரம்மானந்தம், VTV கணேஷ், பிரபாஸ் ஸ்ரீனு, யோகி பாபு, சப்தகிரி, சுப்ரீத் ரெட்டி, வரலட்சுமி சரத்குமார், ஜிசு சென்குப்தா, நயன்தாரா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மாறுதி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஐவி என்டர்டெயின்மென்ட் சார்பக தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா, இஷான் சக்சேனா என பலர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ட்ரெய்லர் வருகின்ற 29-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… லோகா சாப்டர் 2 குறித்த அறிவிப்பை வெளியிட்ட துல்கர் சல்மான்

தி ராஜா சாப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நானியின் பாரடைஸ் படத்தில் இணைந்த நடிகர் மோகன் பாபு