லோகா சாப்டர் 2 குறித்த அறிவிப்பை வெளியிட்ட துல்கர் சல்மான்
Lokah Chapter 2 : நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடைமே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லோகா சாப்டர் 1 சந்திரா படம். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் அருண் டாம்னிக் எழுதி இயக்கி மலையாள சினிமாவில் வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா (Lokah Chapter 1 Chandra). இந்தப் படம் கடந்த 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் நிறுவனம் 30 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் படம் 8 மடங்கு அதிகமாக வசூலித்தது. அதன்படி ரூபாய் 275 கோடிகளுக்கு அதிகமாக இந்தப் படம் திரையரங்குகளில் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறிய பட்ஜெட்டில் உருவாகி தற்போது இத்தனைக் கோடிகளை வசூலித்து கேரள சினிமாவில் இண்டர்ஸ்டியல் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இந்தப் படம் வெளியான போதே படம் 5 பாகங்களாக வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து முதல் பாகமான லோகா சாப்டர் 1 சந்திரா படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் தற்போது இரண்டாவது பாகம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.




கட்டுக்கதைகளுக்கு அப்பால். புனைவுகளுக்கு அப்பால். ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது:
அதன்படி நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் துல்கர் சல்மான் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் இணைந்து பேசுவது போல ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் டொவினோ தாமஸ் தான் முன்னணி வேடத்தில் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் பார்க்கும் போது வில்லனாக டொவினோ தாமஸின் அண்ணன் தான் என்று கூறுகின்றனர். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் துல்கர் சல்மான் உதவிக்கு வருவதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போனு தெரியுமா? வைரலாகும் தேதி
நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Beyond myths. Beyond legends. A new chapter begins. #LokahChapter2
Starring Tovino Thomas.
Written & Directed by Dominic Arun.
Produced by Wayfarer Films.https://t.co/2nkuQQGGKs#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @ttovino @dominicarun@NimishRavi pic.twitter.com/ISBrL8Xan0
— Dulquer Salmaan (@dulQuer) September 27, 2025