Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடர்ந்து நடைபெறும் கொலைகள்.. கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்… சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியான  ஃபாரன்சிக் படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Forensic Movie : சினிமாவில் பல பாணியில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி சைக்கோ த்ரில்லர் பாணியில் உள்ள படங்கள் ஹாரர் படங்கள் போல ரசிகர்களிடையே திகிலை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மலையாள சினிமாவில் வெளியான ஃபாரன்சிக் படம் குறித்து தற்போது பார்க்கலாம்.

தொடர்ந்து நடைபெறும் கொலைகள்.. கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்… சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியான  ஃபாரன்சிக் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
ஃபாரன்சிக்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Sep 2025 21:46 PM IST

மலையாள சினிமாவில் சைக்கோ த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்களிடையே  விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஃபாரன்சிக். நடிகர் டொவினோ தாமஸ் (Actor Tovino Thomas) நாயனகான இந்தப் படத்தில் நடித்து இருந்தார். அவருடன் இணைந்து நடிகர்கள் மம்தா மோகன்தாஸ், சைஜு குருப், ரெபா மோனிகா ஜான், ரெஞ்சி பணிக்கர், ரோனி டேவிட் ராஜ், கிஜு ஜான், ஆதித்யா ஆர். மேனன், தமன்னா பிரமோத், அன்வர் ஷெரீஃப், பிரதாப் போத்தன், ராமு, தனேஷ் ஆனந்த், லுக்மான் அவரன், ஸ்ரீகாந்த் முரளி, அனில் முரளி, மோகன் சர்மா, தென்னல் அபிலாஷ், அஞ்சலி நாயர், பாலாஜி சர்மா, அருணாம்சு தேவ், சமேக்ஷா நாயர், நேவிஸ் சேவியர், தேவி அஜித், ராஜேஷ் ஹெப்பர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனாஸ் கான் இருவரும் இணைந்து இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜூவிஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நேவிஸ் சேவியர் மற்றும் சிஜு மேத்யூ ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

டொவினோ தாமஸின் ஃபாரன்சிக் படத்தின் கதை என்ன?

ஃபாரன்சிக் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் ஃபாரன்சிக் துறையில் சிபிசிஐடியாக இருக்கிறார். இவரது அக்கா மம்தா மோகன் தாஸ் ஏசிபியாக பணியாற்றி வருகிறார். மம்தாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அவரது இரட்டை பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையை கடத்தில் அவர் செய்யும் தொடர் கொலைகளின் குற்றாளியாக சித்தரிக்கிறார். இதில் இருந்து அந்த குழந்தையையும் அந்த தொடர் கொலையாளியையும் டொவினோ தாமஸ் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. மிகவும் விறுவிறுப்பான கதைக் களத்துடன் உள்ள இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… அவங்க என்னோட கூட பிறந்த அக்கா… ப்ரீத்தி அஸ்ரானி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

நடிகர் டொவினோ தாமஸின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Tovino⚡️Thomas (@tovinothomas)

Also Read… GV Prakash: வாத்தி படத்திற்காக தேசிய விருது.. குடியரசு தலைவரின் கையால் விருதை வாங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார்!