Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அவங்க என்னோட கூட பிறந்த அக்கா… ப்ரீத்தி அஸ்ரானி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Preeti Asrani: தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன நடிகை பிரீத்தி அஸ்ரானி தற்போது தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு படத்தில் தனது அம்மாவாக நடித்தவர் அவரது கூட பிறந்த அக்கா என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவங்க என்னோட கூட பிறந்த அக்கா… ப்ரீத்தி அஸ்ரானி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
ப்ரீத்தி அஸ்ரானி
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Sep 2025 18:14 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான குண்டெல்லோ கோதாரி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani). இதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து சுமார் 2022-ம் ஆண்டு வரை தெலுங்கு சினிமாவில் நடிகயாக நடித்து வந்தார் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான அயோத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவருக்கு ஃப்லிம் பேர் மற்றும் சைமா விருதுகளில் அறிமுக நடிகைக்கான விருதை வென்றார் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி.

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழியில் தொடர்ந்து படங்களில் நடிக்க நடிகை ப்ரீத்தி அஸ்ரானி கமிட்டாகி வருகிறார். அதன்படி தமிழில் 2024-ம் ஆண்டு எலெக்‌ஷன் என்ற படத்திலும் 2025-ம் ஆண்டு கிஸ் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியானது கிஸ். நடிகர் கவின் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை பிரீத்தி அஸ்ரானி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்தப் படத்தின் என் அம்மாவாக நடித்தது என் சொந்த அக்கா:

அதன்படி ப்ரீத்தி அஸ்ரானி அளித்தப் பேட்டியில் கூறியுள்ளதாவது அயோத்தி படத்தில் அவரது அம்மாவாக நடித்தது அவரின் உடன் பிறந்த அக்கா என்று தெரிவித்துள்ளார். அந்தப் படத்தில் புடவை எல்லாம் கட்டி வயதானவர் போல மேக்கப் போட்டதால் அவர் அப்படி காட்சியளித்தார் என்றும் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள பல்டி மற்றும் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் ஆகிய படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… நான் ஒரு கதையை சொல்லி அத பிடிக்கலனு எந்த நடிகரும் சொன்னது இல்ல – இயக்குநர் அட்லி

நடிகை ப்ரீத்தி அஸ்ரானி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… பிக்பாஸ் தமிழில் இதுவரை எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் கோப்பையை வென்றார்கள் தெரியுமா? லிஸ்ட் இதோ