AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..

TN govt interim budget 2026: தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட் ஆண்​டு​தோறும் பிப்​ர​வரி மாதம் தாக்​கல் செய்​வது வழக்​க​மாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஆட்​சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்​ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்​களில் தனித்தனியாக தாக்​கல் செய்து வரு​கிறது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.. மக்களை கவரும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Feb 2026 08:28 AM IST

சென்னை, பிப்ரவரி 16: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட் சட்​டப்​பேர​வை​யில் நாளை தாக்​கல் செய்​யப்​படு​கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மேற்கொண்டு வருகிறார். நடப்பாண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன்படி, மக்களை கவரும் வகையில், இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, தேர்தல் காரணமாக மகளிர் உரிமைத் தொகை ஒரே சமயத்தில் ரூ.5,000ஆக வரவு வைக்கப்பட்டது. அதோடு, திமுக மீண்டும் ஆட்சியை தொடரும்போது ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்கும் சசிகலா?.. பிப்.24ல் வெளியாகும் அறிவிப்பு?.. அதிர்ச்சியில் அதிமுகவினர்!!

நாளை தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்:

இந்த சூழலில் தான் நாளைய தினம் இடைக்கால பட்ஜெட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை (பிப்​.17) தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டம் பிப்​.20ம் தேதி வரை நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது. தமிழக அரசின் அடுத்த நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட் ஆண்​டு​தோறும் பிப்​ர​வரி மாதம் தாக்​கல் செய்​வது வழக்​க​மாகும். கடந்த 2021-ம் ஆண்டு ஆட்​சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்​ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்​களில் தனித்தனியாக தாக்​கல் செய்து வரு​கிறது. தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்​டப்​பேரவைத் தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், இடைக்​கால பட்​ஜெட்டை மட்​டும் தாக்​கல்செய்ய முடி​யும். பின்​னர்​, ஆட்​சி அமைக்​கும்​ கட்​சி பட்​ஜெட்​டை​ தாக்​கல்​ செய்​யும்.

சபாநாயகர் அப்பாவு கொடுத்த தகவல்:

இதுதொடர்பாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, வரும் 17ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக சட்டமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அடுத்த கூட்டத்தொடர் கூடுகிறது. அன்றைய தினம் 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். பிப்ரவரி 20ஆம் தேதி வரும் நிதியாண்டிற்கான முன்பண மானிய கோரிக்கை, 2025-26ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவீனங்களுக்கான மானியக் கோரிக்கை ஆகியவை வாசித்து அளிக்கப்படும். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என அலுவல் ஆய்வு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?

பிப்.23ல் அமைச்சரவை கூட்டம்:

இதனிடையே, சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரவுள்​ள​தால், இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமின்​றி, அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்​களைக் கவரும் வகையிலும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெறு​வதற்கு வாய்ப்​புள்​ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும் வகையில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

Follow Us