ENG W vs AUS W Final: பைனலில் களமிறங்கும் இந்திய பெண்.. சரித்திரம் படைக்கப்போகும் சாதனை மகள்!
ICC World Cup Final: கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிதவேகப் பந்து வீச்சாளராக வாழ்க்கையை தொடங்கிய விருந்தா ரதி மும்பை பல்கலைக்கழகத்தின் மகளிர் அணியில் விளையாடினார். இதனை தொடர்ந்து, சீனியர் லெவல் வரை விளையாட வாய்ப்பு கிடைக்காத பிருந்தா ரதி, பின்னர் நடுவர் பணியைத் தனது தொழிலாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தார்.
2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் (Womens T20 World cup 2026) இந்திய அணியின் பயணமானது லீக் சுற்றுடன் முடிவடைந்திருக்கலாம், ஆனால் இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் விருந்தா ரதிக்கு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று அதாவது 2026 ஜூலை 5ம் தேதி இரவு 8 மணிக்குத் தொடங்கும் இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் மகளிர் அணிகள் (ENG W vs AUS W) மோதவுள்ளன. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் களமிறங்கி வரலாறு படைக்கவுள்ளார். இந்தப் போட்டிக்கான போட்டி நடுவர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
இங்கிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் இடையிலான மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் விருந்தா ரதி கள நடுவராக இடம்பெற்றுள்ளார். இவரைத் தவிர, ஜாக்குலின் வில்லியம்ஸ் இரண்டாவது நடுவராக இருப்பார்.




மகளிர் டி20 உலகக் கோப்பை பைனலில் நடுவராகப் பணியாற்றும் முதல் இந்தியர்:
கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிதவேகப் பந்து வீச்சாளராக வாழ்க்கையை தொடங்கிய விருந்தா ரதி மும்பை பல்கலைக்கழகத்தின் மகளிர் அணியில் விளையாடினார். இதனை தொடர்ந்து, சீனியர் லெவல் வரை விளையாட வாய்ப்பு கிடைக்காத பிருந்தா ரதி, பின்னர் நடுவர் பணியைத் தனது தொழிலாக மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். தற்போது, மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராகப் பணியாற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையை விருந்தா பெறுகிறார். இதுமட்டுமின்றி, கள நடுவர் பணியை மேற்கொள்ளும் இரண்டாவது நடுவராகவும் விருந்தா ஆவார். முன்னதாக, 1987-ல் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியாவின் ராம் பாபு குப்தா நடுவராகப் பணியாற்றினார். இந்தப் போட்டியில் விருந்தா ரதி மற்றும் ஜாக்குலின் வில்லியம்ஸ் ஆகியோர் கள நடுவர் பணியை மேற்கொள்வார்கள்.
3 வடிவங்களில் நடுவராகப் பணியாற்றிய அனுபவம்:
இந்திய மகளிர் நடுவர் விருந்தா ரதி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவங்களிலும் இந்தப் பொறுப்பைக் கையாண்ட அனுபவம் அவருக்கு உண்டு. 2023-ல் மும்பையில் இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் இந்திய நடுவர் என்ற பெருமையை விருந்தா ரதி பெற்றார். இன்றுவரை, விருந்தா 20 ஒருநாள் போட்டிகளிலும் 77 மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.
ALSO READ: இங்கிலாந்தின் அசைக்க முடியாத கோட்டையை ஆஸ்திரேலியா தகர்க்குமா? கோப்பை யாருக்கு?
மகளிர் டி20 உலகக் கோப்பையில் இதுவரை ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. இது 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும்.