மகளிர் டி20 உலகக்கோப்பை – இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு கிடைக்கும் பரிசுத்தொகை இவ்வளவா? இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும்?
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 பிரம்மாண்டமான இறுதிப் போட்டிக்கான நேரம் வந்துவிட்டது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டுக்கான பரிசுத் தொகையை ஐசிசி 82 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, ஜூலை 5, 2026 ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த 2026 ஆம் ஆண்டுக்கான பரிசுத்தொகையை ஐசிசி 82 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 22 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 11 கோடி ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளுக்குத் தலா 6.29 கோடி ரூபாயும், குரூப் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்குத் தலா 29 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு கிடைக்கும் பரிசுத்தொகை இவ்வளவா?
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 பிரம்மாண்டமான இறுதிப் போட்டிக்கான நேரம் வந்துவிட்டது. கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், ஜூலை 5, 2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு வலிமையான அணிகள் மோதவுள்ளன. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிக்க : IND vs ENG: பொறுமையை இழந்த பிசிசிஐ.. இந்த வீரர்கள் இந்திய அணியில் இருந்து நீக்கம்!




இந்த 2026 ஆம் ஆண்டு நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் தோல்வியையே சந்திக்காத அணிகளாக ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. முதல் அரையிறுதியில், 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே நேரம், 2வது அரையிறுதியில் வலிமையான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வருகிற ஜூலை 5, 2026 ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸில் நடைபெறவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் யார் வெற்றி பெற்று கோப்பையை வெல்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வெற்றி பெறும் அணிக்கு ஐசிசி முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரிசுத்தொகையை வழங்கவுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டை ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இணையாகக் கொண்டுவரும் நோக்கத்துடன், ஐசிசி இந்த முறை பரிசுத்தொகையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி மொத்தப் பரிசுத் தொகையை ரூ. 82 கோடியாக உயர்த்த ஐசிசி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முந்தைய உலகக் கோப்பையுடன் ஒப்பிடுகையில், இது பரிசுத் தொகையில் சுமார் 10 சதவிகித உயர்வாகும். போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்ச நிதி ஊக்கத்தொகையைப் பெறுவதை உறுதிசெய்ய ஐசிசி திட்டமிட்டது. இதன் விளைவாக, பங்கேற்கும் அனைத்து 12 அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.2.06 கோடி கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிக்க : IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி எப்போது? முழு விவரம் இதோ!
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலக சாம்பியனாகும் அணிக்கு ரூ.22 கோடி பரிசு வழங்கப்படவுள்ளது. இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அந்த அணிக்கு ரூ.11 கோடி என்ற கணிசமான தொகை வழங்கப்படும். அதேவேளையில், அரையிறுதி வரை முன்னேறி பின்னர் வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா ரூ.6.29 கோடியைப் பெறும். குறிப்பிடத்தக்க வகையில், லீக் சுற்றின் போது பெறப்படும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.29 லட்சம் கூடுதல் போனஸ் பரிசையும் ஐசிசி வழங்குகிறது.
இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும்?
அதிக எதிர்பார்ப்புகளுடன் போட்டியில் நுழைந்து, துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றிலேயே வெளியேறிய இந்திய மகளிர் அணி, ஐசிசி விதிமுறைகளின்படி குறிப்பிடத்தக்க தொகையைப் பெறவுள்ளது. லீக் சுற்றில் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தது. நெட் ரன் ரேட் காரணமாக மட்டுமே இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இருப்பினும், லீக் சுற்றில் 3 வெற்றிகளை பெற்ற இந்திய அணிக்கு சுமார் ரூ.90 லட்சம் பரிசுத் தொகையாகக் கிடைக்கும்.