AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? முதன்முறையாக விளக்கமளித்த பிசிசிஐ

15 வயதில் இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திரமாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் அவர் எப்போது அறிமுகமாவார் என்ற சந்தேகத்துக்கு பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? முதன்முறையாக விளக்கமளித்த பிசிசிஐ
வைபவ் சூர்யவன்ஷி
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Jul 2026 19:08 PM IST

15 வயதில் இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திரமாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச போட்டிகளில் எப்போது அறிமுகமாவார் எதிர்பார்ப்புகளுக்கு பிசிசிஐ பதிலளித்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் வைபவ் இடம் பெற்றிருக்கிறார். ஆனாலும், அவருக்கு இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?

இந்த நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, வைபவ் சூர்யவன்ஷி குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய சுக்லா, இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதே வைபவின் திறமைக்குச் சான்று என்றார். மேலும் பேசிய அவர், அணி நிர்வாகத்திற்கு அவர் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், சரியான நேரத்தில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களின் முடிவுகளை மதிக்குமாறும், சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்கள் அல்லது அரசியல் கருத்துக்களுக்குச் செவிசாய்க்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : IND vs ENG: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி எப்போது? முழு விவரம் இதோ!

மேலும்,வைபவ் சூர்யவன்ஷி தனது தேர்வு மூலமே ஏற்கனவே வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய சர்வதேச அணியில் இடம் பிடித்ததன் மூலம், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, இச்சாதனையைப் படைத்த மிக இளம் வயது வீரராக அவர் திகழ்கிறார்.

இருப்பினும், இதுவரை அவர் பிளே லெவனில் இடம்பெறாமல் இருப்பதால், ரசிகர்கள் அவரது அறிமுகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதே நேரம், தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வரும் அணியில் மாற்றங்களைச் செய்வதில் இந்திய அணி நிர்வாகம் அவசரம் காட்டவில்லை. பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் வழிகாட்டுதலில், ஐசிசி டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இந்தியா சமீபகாலமாக வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த வெற்றி கூட்டணியைத் தக்கவைப்பதிலேயே நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட்டும் இதே கருத்தை வலியுறுத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வைபவ் முழுமையாகத் தயாராக இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்ட அதே வேளையில், உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற வீரர்களை ஓரங்கட்டிவிட்டு அவருக்கு உடனடியாக வாய்ப்பளிப்பது பொருத்தமற்றதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க : IND vs SL: 13 நாட்களில் 2 டெஸ்ட் போட்டிகள்.. இலங்கை செல்லும் இந்திய அணி.. டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு!

இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தினார். சமீபத்திய தொடர்களில் தற்போதைய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளையும் வழங்குவது மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு தனிநபருக்கு இடமளிப்பதற்காக மட்டும், சிறப்பாகச் செயல்பட்டு வரும் வீரர்களை அணியிலிருந்து நீக்குவது சரியான முடிவாக இருக்காது என்றும் அவர் கூறினார். எனவே, வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்புகள் நீடிக்கும் அதே வேளையில், அவருக்குச் சரியான நேரத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

Follow Us