ஜேசன் சஞ்சயுடன் மோதும் விஜய்.. ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Jana Nayagan Vs Sigma: தென்னிந்திய மக்கள் மத்தியில், சினிமா நாயகனாகவும், அரசியல் பிரபலமாகவும் இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக முதல்வராக பணியாற்றிவரும் நிலையில், இவரின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்து, தற்போது தமிழகத்தில் முதலமைச்சராக பணியற்றிவருபவர் தளபதி விஜய் (CM Thalapathy Vijay). சினிமாவில் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 68 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் கடைசி படமாக உருவாகியிருந்த படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படத்தை ஆரம்பத்தில் தளபதி 69 என படக்குழு அறிவித்திருந்த நிலையில், பின் ஜன நாயகன் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதை தமிழ் பிரபல இயக்குநர் எச்.வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என்.ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில், பல இன்னல்களை இப்படம் சந்தித்திருக்கிறது. அந்த விதத்தில் தற்போது இப்படத்திற்கு “ஏ” சென்சார் கிடைத்ததாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.
அந்த வகையில் 2026ம் ஆண்டு ஜூலை இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அந்த விதத்தில் ஜூலை இறுதியில்தான், முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் (Jasan Sanjay) இயக்கிய சிக்மா (Sigma) படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்துடன் ஜன நாயகன் வெளியாகுவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.




இதையும் படிங்க: திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு!
ஜேசன் சஞ்சயுடன் மோதும் தளபதி விஜய்:
முதல்வர் விஜயின் மகனாகவும், தற்போது தமிழில் இயக்குநராக அறிமுகமாகியிருப்பவர் ஜேசன் சஞ்சய். இவரின் இயக்கத்தில் முதல் முதலாக உருவாகியிருக்கும் படம்தான் சிக்மா. இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதே தேதியில் ஜன நாயகன் படம் வெளியாக உள்ளதாம். ஆனால் இப்படத்தின் அதிகாரப்பூர்வ சென்சார் இன்னும் கிடைக்கவில்லை. மேலும் படக்குழு ஜன நாயகன் படத்தை ஜூலை 24ம் தேதிக்கு முன் வெளியிட திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் இதுதானா? வைரலாகும் தகவல்
சிக்மா படத்துடன் ஜன நாயகன் படம் மோதுவதாக வைரலாகும் பதிவு:
#JasonSanjay vs #ThalapathyVijay..?
Jason Sanjay’s directorial debut #Sigma is set to release on July 31.
Reports suggest that #JanaNayagan, starring Thalapathy Vijay and directed by H. Vinoth, is also being planned for release on the same date.
The film has reportedly… pic.twitter.com/98YnpZNRIY
— Movie Tamil (@_MovieTamil) July 3, 2026
ஜன நாயகன் பட ரிலீஸ் எப்போது இருக்கும் :
இந்த ஜன நாயகன் படத்திற்கு சென்சார் குழு ஏ தரச் சான்றிதழை பரிந்துரை செய்துள்ளதாம். ஆனால் இன்னும் அது அறிவிக்கப்படவில்லை. இப்படத்தை ஜூலை 23ம் தேதி அல்லது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். அதனால் ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்துடன் மோத வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.