பீகாரில் ரோஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காஞ்சன் தேவி என்ற பெண், தனது கணவருடன் ரோஸ் டே கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில், முதலில் கணவருக்கு ரோஜா மலர்கள் கொடுத்து, பின்னர் கண்ணாடி பாட்டிலில் வைன் வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.