Preethi Asrani : கில்லர் கேர்கள் ப்ரீத்தி அஸ்ரானியின் பிறந்தநாள் – படக்குழு வெளிட்ட சிறப்பு போஸ்டர்!
Preethi Asranis Birthday : ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பில் தமிழில் கில்லர் என்ற படமானது உருவாகிவருகிறது. இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்கி , அதில் நாயகனாக நடிக்கிறார். ப்ரீத்தி அஸ்ரானியின் பிறந்தநாளை முன்னிட்டு கில்லர் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani). மேலும் இவர் தமிழில் சசிகுமாரின் அயோத்தி (Ayothi) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது, தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக நடித்தது வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் கிஸ் (Kiss) என்ற படமானது உருவாகி வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மலையாளத்தில் பல்டி (Balti) என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யாவின் (SJ.Suryah) இயக்கத்தில் கில்லர் (Killer) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூலை மாதம் முதல் தொடங்கியிருந்தது. இப்படத்தில் ஆக்ஷ்ன் கேர்ளாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். இந்நிலையில் ப்ரீத்தி அஸ்ரானி பிறந்தநாளை முன்னிட்டு, கில்லர் பட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க : அரசியலுக்கு வருவேனா? விஜய் அழைத்தாலும்… – ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
எஸ்.ஜே. சூர்யா வெளியிட்ட ப்ரீத்தி அஸ்ரானியின் கில்லர் பட நியூ போஸ்டர் :
HAPPY BIRTHDAY The KILLER GIRL #PrettyPrincess @PreethiOffl 💐💐💐💐💐💐💐💐 have a great year 💐💐💐💐💐👍🙌 pic.twitter.com/splBh2JDcv
— S J Suryah (@iam_SJSuryah) September 6, 2025
எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் கில்லர் திரைப்படம் :
இந்த கில்லர் திரைப்படத்தை இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடிக்கவுள்ளார். சுமார் 10 வருடங்களுக்கு பின் மீண்டும் அவர் இயக்குநராக படங்களை இயக்க தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கில்லர் திரைப்படமானது ஆக்ஷ்ன் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம்.
இதையும் படிங்க : புஷ்பா 3 படம்.. இயக்குநர் சுகுமார் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!
எஸ்.ஜே. சூர்யா இயக்க, இப்படத்தை கோகுலம் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படமானது தற்போது வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆக்ஷ்ன், காதல் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகிவருகிறதாம். மேலும் இந்த புதிய திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
நடிகை ப்ரீத்தி அஸ்ரானியின் நடிப்பில் உருவாகும் படங்கள்
நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, தமிழில் கவினுடன் கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025 செப்டம்பர் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை அடுத்து மலையாளத்தில் நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் உருவாகியுள்ள பல்டி படத்தில் நடித்துள்ளார். இப்படமானது வரும் 2025 செப்டம்பர் 26ம் தேதி முதல் வெளியாகவுள்ளது. இந்த படங்களின் வரிசையில்தான், எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் கில்லர் படத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார்.