Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Killer: எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள்.. கில்லர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாட்டம்!

S.J. Suryah Birthday Celebration : தமிழில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவரின் இயக்கத்திலும் நடிப்பிலும் கில்லர் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Killer: எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள்.. கில்லர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாட்டம்!
கில்லர் படக்குழுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jul 2025 17:50 PM

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் (SJ Suryah) நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கில்லர் (KIller). இந்த படத்தை இயக்குநராக அவரே இயக்கி, அதில் அவரே முன்னணி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தை கோகுலம் மூவிஸ் (Gokulam Movies) நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக, அயோத்தி பட புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani) நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R. Rahman) இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2025, ஜூலை 21ம் தேதியில், எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. படக்குழுவுடன் மகிழ்ச்சியில் தத்தளித்தவாறு, நடிகர் எஸ்.ஜே. சூர்யா கேக் வெட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஷூட்டிங்கில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர்.. உதவிக்கரம் நீட்டிய சிலம்பரசன்!

கில்லர் பட ஷூட்டிங்கில் எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் :

கில்லர் திரைப்படத்தின் கதைக்களம் :

நடிகர் எஸ்,ஜே, சூர்யாவின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது கார் ரேஸ் மற்றும் கேங்ஸ்டர்ஸ் காதல் போன்ற கதைக்களத்துடன் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. எஸ்.ஜே. சூர்யாவுடன் இப்படத்தில் நடிகை ராதிகா சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : குடும்பஸ்தன் படத்தில் முதலில் அந்த நடிகர்தான் நடிக்க வேண்டியது – நடிகர் மணிகண்டன் ஓபன் டாக்

கில்லர் பட ஷூட்டிங் :

நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் இந்த படமானது அதிரடி கதைக்களத்துடன் உருவாகிவருகிறது. சுமார் 10 வருடங்களுக்குப் பின் எஸ்.ஜே. சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடத்துவதற்குப் படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் 70 % சதவீத ஷூட்டிங்கை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.