Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் சமந்தா? அவரே தயாரிக்கவும் செய்கிறாரா – வைரலாகும் தகவல்!

Actress Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா ரூத் பிரபு உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் நடிகை சமந்தா மீண்டும் தெலுங்கு சினிமாவில் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தை அவரே தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் சமந்தா? அவரே தயாரிக்கவும் செய்கிறாரா – வைரலாகும் தகவல்!
சமந்தாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 22 Jul 2025 16:31 PM

நடிகை சமந்தா ரூத் பிரபு (Actress Samantha Ruth Prabhu) தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிப்புத் துறையில் உச்சத்தில் இருந்த இவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாது என்ற காரணத்தால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார் சமந்தா. தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் ரசிகர்களிடையே இணைப்பில் இருந்தார். ஆனால் நடிகை சமந்தா நடிக்கவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் நடிகை சமந்தா சினிமாவில் தயாரிப்பாளர் என்ற புது அவதாரத்தை எடுத்தார். மேலும் அவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அந்த சுபம் படத்தில் கேமியோ ரோலிலும் நடிகை சமந்தா நடித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தெலுங்கு சினிமாவில் கம்பேக் கொடுக்கும் சமந்தா?

என்னதான் நடிகை சமந்தா சுபம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்தாலும் அவரது முழு நீல படம் எப்போது வரும் அவர் எப்போது சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை சமந்தா மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவில் மீண்டும் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் அந்தப் படத்தை நடிகை சமந்தாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது சமந்தா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read… இந்தியன் 3 படத்திற்கு சம்பளம் இல்லாமல் முடித்துக்கொடுக்கும் கமல் மற்றும் ஷங்கர்… ரிலீஸிற்கு தயாராகும் படக்குழு!

நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இன்ஸ்டா போஸ்ட்:

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தமிழில் நடிகை சமந்தா நடிப்பில் ஹிட் அடித்தப் படங்கள்:

தமிழில் நடிகை சமந்தா விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Also read… HBD Yogi Babu: காமெடியனாகவும், நாயகனாகவும் ஜொலிக்கும் நடிகர் யோகி பாபுவிற்கு ஹேப்பி பர்த்டே!