Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தலைவன் தலைவி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்டு

Thalaivan Thalaivii: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான ஏஸ் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் அவரது நடிப்பில் ரசிகர்கள் அடுத்து ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தலைவன் தலைவி. இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தலைவன் தலைவி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்டு
தலைவன் தலைவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jul 2025 20:13 PM

நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இவர் முன்னதாக பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப செண்டிமெண்டை இயக்கிவதில் பெயர்பெற்ற பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது மீண்டும் ஒரு அழகான குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது தலைவன் தலைவி படம். இந்தப் படம் கணவன் மனைவி இடையே இருக்கும் காதல், ஊடல் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon) நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, தீபா, காளி வெங்கட், ரோஷ்ணி ஹரிபிரியன், மைனா நந்தினி, சரவணன், செம்பன் வினோத் ஜோஷ், ஆர்.கே.சுரேஷ், செண்ட்ராயன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

யு/ஏ சான்றிதழ் பெற்ற தலைவன் தலைவி படம்:

முன்னதாக படத்தில் இருந்து பாடல்களும், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. மேலும் படம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தலைவன் தலைவி படம் வருகின்ற 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் குறித்த அப்டேட்களும் படக்குழுவினர் அளிக்கும் பேட்டிகளும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: