Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Harish Kalyan : ஹாரிஸ் கல்யாண் எடுத்த ரிஸ்க் .. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன விஷயம்!

Harish Kalyan Action Movie HK15 Movie Update : தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஹாரிஸ் கல்யாண். இவரின் நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக HK15 திரைப்படமானது தயாராகிவருகிறது. இந்த படத்தில் நடிகர் ஹாரிஸ் கல்யாண் எடுத்த ரிஸ்க் பற்றி அந்த படத்தின், ஸ்டண்ட் மாஸ்டர் பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Harish Kalyan : ஹாரிஸ் கல்யாண் எடுத்த ரிஸ்க் .. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன விஷயம்!
ஹரிஷ் கல்யாணின் HK15 திரைப்படம் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jul 2025 21:59 PM

நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. அவரின் நடிப்பில் குறித்த பட்ஜெட்டில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது லப்பர் பந்து (Luuber Panthu). இந்த படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில், இயக்குநர் வினீத் வரபிரசாத் ( Vineeth Varaprasad) இயக்கத்தில் உருவாகிவரும் படம் HK15. இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆக்சன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படமானது முற்றிலும் ஸ்டண்ட் மற்றும் அதிரடி சண்டை காட்சிகளுடன் (fight scenes) உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர் ஹரிஷ் கல்யாண், டூப் இல்லாமல் நடித்திருப்பது குறித்து அந்த படத்தின் சண்டை பயிற்சியாளர் சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அதில் HK15 படத்திற்காக ஹரிஷ் கல்யாண் எடுக்கும் ரிக்ஸ் மற்றும் அவரின் திறமைகள் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : பட்ஜெட் சிக்கல்… பிளாக்மைல் படத்தில் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த ஜி.வி. பிரகாஷ்!

ஹரிஷ் கல்யாணின் KH15 பட சண்டை பயிற்சியாளர் சொன்ன விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய HK15 பட சண்டை பயிற்சியாளர், அதில் “அஜித் சார், விஜய் சார் மற்றும் சூர்யா சாரின் திறமைகள் அப்படியே நடிகர் ஹரிஷ் கல்யாணிடம் இருக்கிறது. HK15 திரைப்படத்திற்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் பல ரிஸ்க் எடுத்திருக்காரு. அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது பல விபத்துகள் நடந்திருக்கிறது. படப்பிடிப்பின்போது ஹரிஷ் கல்யாண் ஸ்டண்ட் செய்யும்போது பல அடிகள் நடந்திருக்கிறது.

சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடலாமா என நானும் ஹரிஷ் கல்யாணிடம் கேட்டேன்.  அதற்கு அவர் முதல் தடவை இப்படி சண்டைக் காட்சியில் நடிக்கிறேன், அதனால் டூப் வேண்டாம். டூப் போட்டு நடித்தாலே பெயர் கிடைக்காது சார். டூப் இருக்கட்டும் ஆனாலும் நானும் ரிக்ஸ் எடுத்து நடிக்கிறேன் என கூறினார். அதன் காரணமாக ரிஸ்க் எடுத்துத்தான் நடிகர் ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் நடித்து வருகிறார் என HK15 படச் சண்டை பயிற்சியாளர் ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : ஏஐ உருவாக்கிய புது கிளைமேக்ஸுடன் வெளியாகும் தனுஷின் ‘அம்பிகாபதி’ – வெளியான சூப்பர் அப்டேட்!

ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட HK15 பட அறிவிப்பு பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

ஹரிஷ் கல்யாணின் HK15 திரைப்படம் :

நடிகர் ஹரிஷ் கல்யாணின் HK15 திரைப்படத்தை இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கிவருகிறார். இவர் ஏற்கனவே கவினின் லிப்ட் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்டார் பட நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்து வருகிறார். இப்படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து ஷூட்டிங் பிரம்மாண்டமாகச் சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைப் படக்குழு வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.