Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pandiraaj : இட்லி கடை மற்றும் தலைவன் தலைவி ஒரே கதையா? விளக்கம் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

Thalaivan Thalaivii And Idly Kadai Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் பாண்டிராஜ். இவரின் இயக்கத்தில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தனுஷின் இட்லி கடை படத்துடன் தொடர்புப் படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதற்கு இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

Pandiraaj : இட்லி கடை மற்றும்  தலைவன் தலைவி ஒரே கதையா? விளக்கம் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!
தலைவன் தலைவி மற்றும் இட்லி கடை திரைப்படங்கள் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jul 2025 12:29 PM

விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் நித்யா மேனனின் (Nithya Menon) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாக்கியுள்ளார் இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக இட்லி கடை மற்றும்  தலைவன் தலைவி படத்தைப் பலரும் ஒப்பிட்டு வருகின்றனர். இந்த இரு படங்களிலும் ஹீரோ ஹோட்டல் வைத்துள்ளார். அதனால் இப்படத்தின் கதைக்களமும் ஒன்றாகத்தான் இருக்கும் என இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில் அவர், இட்லி கடை (Idly Kadai) திரைப்படம்தான், முதலில் வெளியாகவிருந்தது. இந்த தலைவன் தலைவி படத்திற்கு இட்லி கடை படத்திற்கும் பெரியதாக எந்தவித ஒற்றுமையும் இருக்காது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : தனுஷின் ‘இட்லி கடை’ பட முதல் பாடல்.. அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

இயக்குநர் பாண்டிராஜ் தலைவன் தலைவி மற்றும் இட்லி கடை ஒப்பீடு பற்றிப் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், ” இட்லி கடை திரைப்படம் வரும்போதே, அதிலும் நித்யா மேனன் இருக்கிறார். இந்த தலைவன் தலைவி படத்திலும் நித்யா மேனன் இருக்கிறார், இந்த இரு படங்களிலும் ஹோட்டல் வைத்திருக்கின்றனர் எனவே இப்படத்தின் கதை பற்றிய ஒப்பீடு வந்தது. அந்த கேள்விகள் வரும்போது , நாங்கள் இட்லி கடை படத்தில் நித்யா மேனன், மாவு அரைத்தால், இந்த தலைவன் தலைவி படத்தில் பரோட்டா போடுவார் என நாங்களே பேசிக்கொள்வோம்.

இதையும் படிங்க : எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

மேலும் தலைவன் தலைவி படத்தில் நித்யா மேனன் நடிக்கும்போது , அவரும் இப்படங்களின் கதை ஒரே மாதிரி இருக்கிறது என்று எங்களிடம் கூறியதில்லை. சொல்லப்போனால், இட்லி கடை படம்தான் முதலில் வெளியாக இருந்தது, அப்படிப் பார்க்கும்போது இந்த இரு படங்களுக்கும் எந்தவித ஒப்பீடும் இருக்காது என இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தலைவன் தலைவி ட்ரெய்லர் ரிலீஸ் பதிவு :

நித்யா மேனன், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாக்கியிருக்கும் இப்படமானது, விவாகரத்து மற்றும் காதல் கதைகளை அடிப்படியாகக் கொண்டு உருவாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் 2 வருடங்களுக்குப் பின் வெளியாகவுள்ள படம் என்பதால மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் வரும் 2025, ஜூலை 23ம் தேதியில் ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.