AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIH Hockey World Cup 2026: மீண்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதல்.. 2026 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு!

India vs Pakistan Hockey World Cup: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேல்ஸ் அணிக்கு எதிராக இந்த போட்டியில் தனது பயணத்தைத் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, வருகின்ற 2026 ஆகஸ்ட் 17ம் தேதி இங்கிலாந்துடனும், வருகின்ற 2026 ஆகஸ்ட் 19ம் தேதி பாகிஸ்தானுடனும் விளையாடுகிறது.

FIH Hockey World Cup 2026: மீண்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதல்.. 2026 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு!
இந்திய ஹாக்கி அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Mar 2026 15:39 PM IST

FIH ஹாக்கி உலகக் கோப்பை 2026 (FIH Hockey World Cup 2026) போட்டியை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் நடத்தவுள்ளன. வருகின்ற 2026 ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான குழுக்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதனுடன், உலகக் கோப்பை 2026 அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் போட்டியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய ஹாக்கி அணியும் (Indian Hockey Team), பாகிஸ்தான் ஹாக்கி அணியும் மோதவுள்ளன. 2024 ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

ALSO READ: ஜெர்சியின் 7ம் நம்பரை விட்டுக்கொடுக்கும் தோனி..? வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு! என்ன காரணம்?

வெளியான 2026 ஹாக்கி உலகக் கோப்பை அட்டவணை:

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேல்ஸ் அணிக்கு எதிராக இந்த போட்டியில் தனது பயணத்தைத் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, வருகின்ற 2026 ஆகஸ்ட் 17ம் தேதி இங்கிலாந்துடனும், வருகின்ற 2026 ஆகஸ்ட் 19ம் தேதி பாகிஸ்தானுடனும் விளையாடுகிறது. அதன்படி இந்திய அணி தனது அனைத்துப் போட்டிகளையும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் விளையாட இருக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான FIH ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் இரண்டும், 2026 ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் ஒரே நேரத்தில் நடைபெறும். ஒவ்வொரு தொடரிலும் மொத்தமாக 16 அணிகள் பங்கேற்கும். அனைத்துப் போட்டிகளும் ஆம்ஸ்டெல்வீனில் உள்ள வாகேனார் ஸ்டேடியத்திலும், பெல்ஜியத்தின் வாவ்ரேயில் உள்ள புதிய பெல்ஃபியஸ் ஹாக்கி அரங்கத்திலும் நடைபெறவுள்ளது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அட்டவணை:

  • 2026 ஆகஸ்ட் 15: இந்தியா – வேல்ஸ்
  • 2026 ஆகஸ்ட் 17: இந்தியா – இங்கிலாந்து
  • 2026 ஆகஸ்ட் 19: இந்தியா – பாகிஸ்தான்

இந்திய மகளிர் அணி யாருடன் போட்டியிடும்?

2026 ஹாக்கி உலகக் கோப்பைக்கான ‘டி’ பிரிவில் இந்திய மகளிர் அணி இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் சீனா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இந்திய மகளிர் அணியின் முதல் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 16ம் தேதி ஆம்ஸ்டெல்வீனில் சீனாவுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதைத் தொடர்ந்து, 2026 ஆகஸ்ட் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவுடனும், 2026 ஆகஸ்ட் 20ம் தேதி இங்கிலாந்துடனும் போட்டிகள் நடைபெறும். இந்திய மகளிர் அணி சமீபத்திய ஆண்டுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலகக் கோப்பைக்கான வலுவான போட்டியாளராக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்திய மகளிர் அணி தனது அனைத்து லீக் ஸ்டேஜ் போட்டிகளையும் நெதர்லாந்தில் விளையாடும்.

ALSO READ: அவர் என் இடத்தில் இருந்தால் தான் தெரியும் – தோனியின் கருத்துக்கு கம்பீர் பதில்

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் அட்டவணை

  • 2026 ஆகஸ்ட் 16: சீனா vs இந்தியா
  • 2026 ஆகஸ்ட் 18: இந்தியா – தென்னாப்பிரிக்கா
  • 2026 ஆகஸ்ட் 20: இந்தியா vs இங்கிலாந்து

Follow Us