AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BAN vs PAK: வங்கதேச வீரர்கள் செய்த செயல்.. ஹெல்மெட்டை எறிந்த சல்மான் ஆகா.. வைரலாகும் வீடியோ!

Salman Agha Controversy Run Out: பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் ஆகா ரன் அவுட் செய்யப்பட்டதால் ஸ்போர்ட்மேன்ஷிப் குறித்து கேள்விகள் எழ தொடங்கியுள்ளது. ரன் அவுட் ஆன பிறகு, சல்மான் ஆகா முதலில் தனது கையுறைகளைக் கழற்றி எறிந்தார். பின்னர் தனது ஹெல்மெட்டை தரையில் வீசி எறிந்து அங்கிருந்து பெவிலியன் திரும்பினார்.

BAN vs PAK: வங்கதேச வீரர்கள் செய்த செயல்.. ஹெல்மெட்டை எறிந்த சல்மான் ஆகா.. வைரலாகும் வீடியோ!
சர்ச்சைக்குரிய ரன் அவுட்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Mar 2026 19:14 PM IST

பாகிஸ்தான் (Pakistan Cricket Team) மற்றும் வங்கதேசம் (Bangladesh) இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சல்மான் ஆகா ரன் அவுட் செய்யப்பட்டதால் ஸ்போர்ட்மேன்ஷிப் குறித்து கேள்விகள் எழ தொடங்கியுள்ளது. ரன் அவுட் ஆன பிறகு, சல்மான் ஆகா முதலில் தனது கையுறைகளைக் கழற்றி எறிந்தார். பின்னர் தனது ஹெல்மெட்டை தரையில் வீசி எறிந்து அங்கிருந்து பெவிலியன் திரும்பினார். இதற்கிடையில், சல்மான் டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பிய பிறகு, முகமது ரிஸ்வான் வங்கதேச வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இந்திய அணியின் அடுத்த சர்வதேச போட்டி எப்போது..? எந்த அணிக்கு எதிராக விளையாடும்?

என்ன நடந்தது..?


பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. 2026 டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்த பர்ஹான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39வது ஓவரின் நான்காவது பந்தில் ஒரு சம்பவம் நடந்தது. இது தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. வங்கதேச கேப்டன் மெஹ்தி ஹசன் மிராஸ் பந்து வீச, பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். மெஹ்தி ஹசன் மிராஸ் பந்தை எதிர்கொண்ட முகமது ரிஸ்வான் பந்தை லேசாக முன் தள்ளினார். இது நேராக எதிர்புறம் நின்ற சல்மான் காலுக்கு அடியில் சென்றது.

ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் எங்கே..?

சல்மான் ஆகா நான்-ஸ்ட்ரைக்கரின் முனையில் தனது கிரீஸுக்கு வெளியே வந்தபோது, பந்து சல்மானின் பேட்டில் பட்டு மெஹ்தி ஹசனின் கைகளுக்குள் சென்றது. அப்போது, இருவரும் மோதிக்கொண்டனர். பந்து இனி அடுத்த பாலுக்கு செல்லும் என்று நினைத்த சல்மான், அதை எடுக்க குனிந்தார். அவர் அவ்வாறு செய்வதற்கு முன்பு, மெஹ்தி ஹசன் அதை எடுத்து ஸ்டம்புகளில் அடித்தார். இதனால் ரன்-அவுட் முறையீடு செய்யப்பட்டது. விதிகளின்படி, மூன்றாவது நடுவர் சல்மானை அவுட் என்று அறிவித்தார்.

ALSO READ: 2027 ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைக்கும் பிசிசிஐ.. பக்கா ப்ளானுடன் களமிறங்கும் ரோஹித், கோலி!

சல்மான் ஆகா நடந்ததை நம்பமுடியாமல் நின்று வேடிக்கை பார்த்தார். வங்கதேச வீரர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நினைத்த சல்மான் ஆகாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. மூன்றாவது நடுவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் முதலில் தனது கையுறைகளையும், பின்னர் தனது தலைக்கவசத்தையும் தூக்கி எறிந்தார். டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பியதும், அவர் தனது மட்டையையும் தலைக்கவசத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கோபமாகக் கத்தினார். இதை சமூக வலைதளங்களில் பார்த்த கிரிக்கெட் ஆர்வலர்கள் வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் ஸ்போர்ட்மேன்ஷிப் எங்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow Us