AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Indian Cricket Team: இந்திய அணியின் அடுத்த சர்வதேச போட்டி எப்போது..? எந்த அணிக்கு எதிராக விளையாடும்?

Indian Cricket Team Next International Match: இந்தியாவின் அடுத்த சர்வதேச போட்டிக்கு முன்பு கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் 2026ஐ 2026 மார்ச் 28ம் தேதி முதல் 2026 மே 31ம் தேதி வரை கண்டுகளிக்கலாம். ஐபிஎல் லீக் முடிந்த பிறகு, இந்திய அணி வருகின்ற 2026 ஜூன் மாதத்தில் தனது அடுத்த சர்வதேச போட்டியை விளையாட களத்தில் இறங்கும்.

Indian Cricket Team: இந்திய அணியின் அடுத்த சர்வதேச போட்டி எப்போது..? எந்த அணிக்கு எதிராக விளையாடும்?
இந்திய அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Mar 2026 17:23 PM IST

கடந்த 2026 மார்ச் 8ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணி வீரர்கள் தனித்தனியாக பிரிந்து ஐபிஎல் 2026ல் (IPL 2026) கிட்டத்தட்ட 2 மாதங்கள் விளையாட இருக்கின்றன. இதற்கு பிறகு, இந்திய அணி அடுத்த சர்வதேச போட்டியில் எப்போது விளையாடும், யாருக்கு எதிராக விளையாடும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இந்திய அணி மீண்டும் எப்போது விளையாடும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: 10 இடங்களில் 4 இந்திய பேட்ஸ்மேன்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் சூர்ய படை!

இந்திய அணியின் அடுத்த சர்வதேச போட்டி எப்போது?

இந்தியாவின் அடுத்த சர்வதேச போட்டிக்கு முன்பு கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் 2026ஐ 2026 மார்ச் 28ம் தேதி முதல் 2026 மே 31ம் தேதி வரை கண்டுகளிக்கலாம். ஊடக அறிக்கைகளின்படி, ஐபிஎல் லீக் முடிந்த பிறகு, இந்திய அணி வருகின்ற 2026 ஜூன் மாதத்தில் தனது அடுத்த சர்வதேச போட்டியை விளையாட களத்தில் இறங்கும்.

இந்தத் தொடர் யாருடன் இருக்கும்?

இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. இந்த அணிகள் ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. வருகின்ற 2026 ஜூன் 6ம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறும். அதன் பிறகு, இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. ஒருநாள் தொடரின் 3 போட்டிகள் வருகின்ற 2026 ஜூன் 14, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும். இது ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதல் இருதரப்பு ஒருநாள் தொடராகும்.

தொடர் எங்கு நடைபெறுகிறது?

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி நியூ சண்டிகர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதன் பிறகு, 3 ஒருநாள் போட்டிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், லக்னோவில் உள்ள ஏகானா மைதானம் மற்றும் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும்.

ALSO READ: யுவராஜ் சிங்கை நீக்க சொன்னாரா தோனி..? முன்னாள் தேர்வாளர் பரபர பேச்சு!

அடுத்த டி20 தொடர் யாருடன்?

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும். ஆனால் இந்தியா அடுத்த டி20 தொடரில் யாரை எதிர் கொள்ளும் என்ற கேள்வி எழுகிறது. டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்தியா அடுத்த டி20 தொடரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும். ஆப்கானிஸ்தான் தொடருக்குப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடரை விளையாடும். முதலில் இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவார்கள். இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும். இந்த டி20 தொடர் வருகின்ற 2026 ஜூலை 01 முதல் 2026 ஜூலை 11 வரையிலும், ஒருநாள் தொடர் 2026  ஜூலை 14 முதல் ஜூலை 19 வரையிலும் நடைபெறும்.

Follow Us