AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

MS Dhoni: யுவராஜ் சிங்கை நீக்க சொன்னாரா தோனி..? முன்னாள் தேர்வாளர் பரபர பேச்சு!

MS Dhoni - Yuvraj Singh: சமீபத்தில் யுவராஜ் சிங் (Yuvraj Singh) அளித்த பேட்டி ஒன்றில் கூட, நானும், தோனியும் நண்பர்கள் கிடையாது. அவர் அணியின் கேப்டனாக இருந்தார், நான் துணை கேப்டனாக இருந்தேன் அவ்வளவுதான் என்று தெரிவித்தார். இது சர்ச்சையை கிளப்பியது.

MS Dhoni: யுவராஜ் சிங்கை நீக்க சொன்னாரா தோனி..? முன்னாள் தேர்வாளர் பரபர பேச்சு!
யுவராஜ் சிங் - எம்.எஸ்.தோனிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Mar 2026 23:24 PM IST

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) குறித்து யுவராஜின் தந்தை யோகராஜ் சிங் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கை அழிவதற்கு காரணம் தோனிதான் என்று எப்போது ஏதேனும் கருத்தை கூறுவார். இது அவ்வபோது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பும். சமீபத்தில் யுவராஜ் சிங் (Yuvraj Singh) அளித்த பேட்டி ஒன்றில் கூட, நானும், தோனியும் நண்பர்கள் கிடையாது. அவர் அணியின் கேப்டனாக இருந்தார், நான் துணை கேப்டனாக இருந்தேன் அவ்வளவுதான் என்று தெரிவித்தார். இந்தநிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்திருந்த சந்தீப் பாட்டீல், சமீபத்தில் தலைமைத் தேர்வாளராக தனது பதவிக் காலம் குறித்து தனது யூடியூப் சேனலான “தி விக்கி லால்வானி ஷோ”வில்  மனம் திறந்து பேசினார். அதில், அணித் தேர்வின் போது எடுக்கப்பட்ட சில பெரிய மற்றும் சர்ச்சைக்குரிய முடிவுகள் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ALSO READ: களத்தில் மிட்செல் மேல் பாய்ந்த பந்து.. அசால்ட் செய்த அர்ஷ்தீப்.. அபராதம் விதித்த ஐசிசி!

யுவராஜ் சிங்கை நீக்க சொன்னாரா தோனி..?


யுவராஜ் சிங்கை நீக்க சொன்னாரா தோனி என்பது குறித்து பேசிய சந்தீப் பாட்டீல், “இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங்கை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒருபோதும் கோரவில்லை. தேர்வுக் கூட்டத்திலோ, சுற்றுப்பயணத்திலோ (தொடரிலோ) அல்லது போட்டியிலோ எந்த நேரத்திலும் யுவராஜை நீக்குமாறு தோனி அறிவுறுத்தவில்லை. எம்.எஸ். தோனி எப்போதும் தேர்வுக் குழுவின் முடிவையே நம்பி இருந்தார். இந்த விஷயத்தில் அவர் ஒருபோதும் எங்களுக்கும், யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றார்.

கவுதம் கம்பீருக்கு இன்னும் என் மேல் கோபம்:

தொடர்ந்து, தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரைப் பற்றியும் பாட்டீல் சுவாரஸ்யமாகப் பேசினார். அதில், “ஷிகர் தவான் இந்திய அணிக்குள் வந்தபோது, ​​கம்பீர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவுக்குப் பிறகும், கவுதம் கம்பீர் இன்னும் என்னுடன் பேசுவதில்லை. இருவருக்கும் இடையிலான உறவு எப்போதோ முறிந்துவிட்டது. ஒரு காலத்தில் கம்பீர் என்னுடன் நல்ல நட்பஒ கொண்டிருந்தார். என்னுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார். ஆனால், அதன்பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது கூட கம்பீர் தன்னைப் பார்ப்பதில்லை, ஹாய்-ஹலோவுக்குக் கூட பதிலளிக்கவில்லை.

ALSO READ: 10 இடங்களில் 4 இந்திய பேட்ஸ்மேன்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் சூர்ய படை!

இது போன்ற சூழ்நிலையில் எனது பதவிக் காலத்தில், சச்சின் டெண்டுல்கரை அணியில் இருந்து நீக்குவது குறித்தும் விவாதம் நடந்தது. அதன் பிறகு, சச்சின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். வி.வி.எஸ். லட்சுமணன், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி போன்ற பல வீரர்கள் காலப்போக்கில் முடிவுகளை ஏற்றுக்கொண்டு வெளியேறினர். ஆனால், கவுதம் கம்பீர் இன்னும் அந்த விஷயத்தை மறக்கவில்லை” என்றார்.

Follow Us