ICC T20I Rankings: 10 இடங்களில் 4 இந்திய பேட்ஸ்மேன்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் சூர்ய படை!
ICC Rankings T20 Batsmens: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா வெறும் 141 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும், அவர் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஒரு மாத போராட்டத்திற்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) 2026 டி20 உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2026 டி20 உலகக் கோப்பை தொடக்கத்தில் இருந்தே அபிஷேக் சர்மாவின் பேட்டிங் செயல்திறன் மோசமாக இருந்தது. இருப்பினும், நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அதேநேரத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் போன்ற பேட்ஸ்மேன்கள் உலக சாம்பியன்களாக இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர். டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.
ALSO READ: இந்திய அணிக்கு ரூ.131 கோடியை வாரி வழங்கிய பிசிசிஐ.. வீரர்களுக்கு எப்படி பகிர்ந்தளிக்கப்படும்?




4 இந்திய பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆதிக்கம்:
Making a massive impact 🔝#T20WorldCup winners Abhishek Sharma and Ishan Kishan leading the way in the ICC Men’s T20I Batting Rankings 👏#TeamIndia | @OfficialAbhi04 | @ishankishan51 pic.twitter.com/GvhSLKyxi4
— BCCI (@BCCI) March 11, 2026
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா வெறும் 141 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும், அவர் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அவரது மதிப்பீட்டு புள்ளிகள் கணிசமாகக் குறைந்திருந்தாலும், உலகக் கோப்பையில் 317 ரன்கள் எடுத்த இஷான் கிஷான் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்கள் தரவரிசையை பின்னடைவை சந்திருந்தாலும் முதல் 10 இடங்களிலேயே உள்ளனர். திலக் வர்மா ஒரு இடம் சரிந்து ஏழாவது இடத்திற்கும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இரண்டு இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ALSO READ: அலைமோதிய கூட்டம்.. கிடைக்காத விமானம்.. ரயிலில் பயணித்து வீட்டுக்கு சென்ற சிவம் துபே!
சஞ்சு சாம்சன் முன்னேற்றம்:
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக வெறும் 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன், போட்டியில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார். தொடர்ச்சியாக 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் 80 ப்ளஸ் ரன்களை குவித்ததன் காரணமாக அவருக்கு குறிப்பிடத்தக்க தரவரிசை முன்னேற்றங்களை அளித்துள்ளன. சஞ்சு சாம்சன் இப்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 22வது இடத்தையும், சிவம் துபே 27வது இடத்தை பிடித்துள்ளனர். முன்னதாக, சஞ்சு சாம்சன் 40வது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.