AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2027 ODI World Cup: 2027 ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைக்கும் பிசிசிஐ.. பக்கா ப்ளானுடன் களமிறங்கும் ரோஹித், கோலி!

BCCI Focus For 2027 ODI WC: ஐபிஎல்லுக்கு பிறகு, இந்தியா ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதனை தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடும். இதனுடன் இந்திய அணி அயர்லாந்திற்கு எதிராக விளையாட இருக்கிறது.

2027 ODI World Cup: 2027 ஒருநாள் உலகக் கோப்பையை குறிவைக்கும் பிசிசிஐ.. பக்கா ப்ளானுடன் களமிறங்கும் ரோஹித், கோலி!
இந்திய அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Mar 2026 15:53 PM IST

வருகின்ற 2026 மே மாதம் ஐபிஎல் 2026 (IPL 2026) சீசன் முடிந்தவுடன், இந்திய கிரிக்கெட் அணி முழுக்க முழுக்க ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்திய அணி (Indian Cricket Team) 2 டி20 உலகக் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. இதனுடன் 2025 சாம்பியன்ஸ் டிராபியையும், 2025 ஆசிய கோப்பையையும் வென்றது. கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லவில்லை. 2011ம் ஆண்டுக்கு பிறகு நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி 2 முறை அரையிறுதியிலும், ஒரு முறை இறுதிப்போட்டிக்கும் சென்றது. ஆனால், உலகக் கோப்பையை மட்டும் வெல்ல முடியாத சூழல் உண்டானது. இதனால், 2027 உலகக் கோப்பையை பிசிசிஐ பெரிய அளவில் குறிவைத்துள்ளது.

ALSO READ: டிராவிட், மிதாலிக்கு சிறப்பு கௌரவம்.. பிசிசிஐ விருது பட்டியலில் சுப்மன் கில்..!

கூடுதல் ஒருநாள் போட்டியை கேட்கும் இந்தியா:

தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த ஒரு அறிக்கையின்படி, பிசிசிஐ வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களிலிருந்து அவர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் கூடுதலாக ஒருநாள் போட்டிகளை சேர்க்க வலியுறுத்திவருகிறது. இதை பிற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடும் ஒரே வடிவம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே. கோலி, ரோஹித் தொடர்ந்து விளையாடுவதன் மூலம், ஒருநாள் வடிவங்களில் அவர்களது போட்டி செயல்திறன் குறித்து கண்காணிக்கப்படும்.

ஐபிஎல்லுக்கு பிறகு, இந்தியா ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதனை தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடும். இதனுடன் இந்திய அணி அயர்லாந்திற்கு எதிராக விளையாட இருக்கிறது. தொடர்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணியும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பின்னர், இந்திய அணியானது வங்கதேசம் (தெளிவாக தெரியவில்லை), வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும் டி20 தொடரிலும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. முன்னர் குறிப்பிடப்பட்ட அறிக்கையின்படி, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கூடுதல் ஒருநாள் போட்டிகளை கேட்டுள்ளது.

ALSO READ: ஐபிஎல்லின் மாலை நேர போட்டிகள் எப்போது தொடங்கும்..? நேரத்தில் மாற்றமா?

தீவிர பயிற்சியில் கோலி, ரோஹித்:

வரவிருக்கும் 2026 ஐபிஎல் சீசனுக்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தீவிர பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, இருவரும் ஐபிஎல் 2026 சீசனில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us