AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல்லின் மாலை நேர போட்டிகள் எப்போது தொடங்கும்..? நேரத்தில் மாற்றமா?

IPL 2026 Match Time: பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அளித்த தகவலின்படி, மீதமுள்ள அட்டவணையானது வரும் நாட்களில் வெளியாகும் என்று தெளிவாக தெரிகிறது. மறுபுறம், மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் 2026க்கு தயாராகும் வகையில் பயிற்சிகளை தொடங்கியுள்ளன. இதற்காக 10 அணிகளின் நிர்வாகமும் வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

IPL 2026: ஐபிஎல்லின் மாலை நேர போட்டிகள் எப்போது தொடங்கும்..? நேரத்தில் மாற்றமா?
ஐபிஎல் 2026 நேர அட்டவணைImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Mar 2026 23:01 PM IST

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2026க்கான (IPL 2026) அட்டவணையை பிசிசிஐ (BCCI) நேற்று அதாவது 2026 மார்ச் 11ம் தேதி வெளியிட்டது. 4 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, இந்த 19வது சீசனின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 10 அணிகள் 16 நாட்களில் 20 போட்டிகளில் விளையாடும். இந்த 20 போட்டிகளில் 4 டபுள் ஹெடர்கள் (ஒரு நாளில் 2 போட்டிகள்) அடங்கும். முதல் கட்டத்தில், ஒவ்வொரு அணிக்கும் குறைந்தது 3 போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள அட்டவணை சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

ALSO READ: சிக்கலில் ஐபிஎல் 2026ன் முதல் போட்டி.. RCB – SRH போட்டி மாற்றமா?

பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அளித்த தகவலின்படி, மீதமுள்ள அட்டவணையானது வரும் நாட்களில் வெளியாகும் என்று தெளிவாக தெரிகிறது. மறுபுறம், மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் 2026க்கு தயாராகும் வகையில் பயிற்சிகளை தொடங்கியுள்ளன. இதற்காக 10 அணிகளின் நிர்வாகமும் வீரர்களும் தயாராகி வருகின்றனர். சில அணி நிர்வாகத்தால் புதிய ஜெர்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. சீசனின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்து விளையாடும். இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும். இது போன்ற சூழ்நிலைகளில், இந்த ஐபிஎல் 2026 சீசன் மதியம் மற்றும் மாலையில் நடைபெறும் போட்டிகள் எத்தனை மணிக்குத் தொடங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

19வது சீசனின் முதல் போட்டி எத்தனை மணிக்கு?

19வது சீசனின் தொடக்கப் போட்டி வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி நடைபெறும். இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கும். டாஸ் மாலை 7 மணிக்கு நடைபெறும். அதன் பிறகு, திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 1 போட்டி நடைபெறும். அதன் பிறகு, சனிக்கிழமைகளில் ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெறும். 2026 ஏப்ரல் 4 சனிக்கிழமை மற்றும் 2026 ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் 2 போட்டிகள் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிகள் இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். டாஸ் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும் போட்டியானது, இரவு 7 முதல் 7.30 மணிக்கு முடிவடையும்.

ALSO READ: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

ஐபிஎல் போட்டிகளை எங்கே பார்க்கலாம்?

ஐபிஎல் 19வது சீசன் போட்டிகளை டிவியில் பார்க்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் காணலாம். மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலம் மொபைல் மற்றும் மடிக்கணினியில் லைவில் போட்டியை கண்டுகளிக்கலாம்.

Follow Us