AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அப்டேட்!

IPL 2026 Schedule: வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன்களான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்கும். பின்னர் போட்டிகள் வருகின்ற 2026 ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

IPL 2026: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அப்டேட்!
ஐபிஎல் 2026Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Mar 2026 14:50 PM IST

ஐபிஎல் 2026 சீசனுக்கான (IPL 2026) அட்டவணை பல நாட்கள் காத்திருப்பு பிறகு, இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஐபிஎல் 2026ன் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை நேற்று அதாவது 2026 மார்ச் 11ம் தேதி வெளியிட்டது. இந்த ஐபிஎல் போட்டியானது வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்கி 2026 மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆனால், முதல் 16 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐயின் இந்த அறிவிப்பால் பல ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள போட்டிகளுக்கான தேதிகள் எப்போது வெளிப்படும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விஷயம் குறித்து பிசிசிஐயிடமிருந்து தற்போது ஒரு அப்டேட்டை வெளியிடப்பட்டுள்ளது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் மீதமுள்ள அட்டவணை வெளியிடப்படும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ALSO READ: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி எப்போது? எந்த 4 அணிகளுடன் மோதுகிறது?

முதல் போட்டியில் யார் யார் மோதுகிறார்கள்?

வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன்களான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்கும். பின்னர் போட்டிகள் வருகின்ற 2026 ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தோராயமாக 3 அல்லது 4 போட்டிகளில் விளையாட இருக்கின்றனர். இருப்பினும், மாநிலத் தேர்தல்கள் காரணமாக இதற்குப் பிறகு நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த 2026ம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

மீதமுள்ள போட்டிகளின் அட்டவணை எப்போது வெளியிடப்படும்?

சட்டமன்றத் தேர்தல் காரணமாக சரியான ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அட்டவணையை வாரியம் இன்னும் வெளியிடவில்லை. இது குறித்து பேசிய ராஜீவ் சுக்லா, “ஐபிஎல் 2026 திட்டமிட்டபடி நடைபெறும். முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கான தேதிகளை வெளியிட்டவுடன், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

ALSO READ: ஐபிஎல் 2026ல் எல்லாமே மாறுது.. புது அனுபவத்தில் சூரியவன்ஷி, ஜடேஜா!

பெங்களூரு மற்றும் கவுகாத்தியில் போட்டிகள்:

ஆரம்ப அட்டவணையில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டி எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும். இதன் பொருள் பிசிசிஐயும் ஸ்டேடியத்தில் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த அட்டவணையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சொந்த மைதானத்தில் 3 போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில், 3 போட்டிகளும் ஜெய்ப்பூருக்கு பதிலாக கவுகாத்தியில் நடைபெறும். அங்கு கடந்த சில சீசன்களாக அந்த அணி இரண்டு முதல் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இருப்பினும், இந்த முறை, ஜெய்ப்பூரில் போட்டிகள் நடைபெறுமா என்பது தெரியவில்லை.

Follow Us