AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி எப்போது? எந்த 4 அணிகளுடன் மோதுகிறது?

IPL 2026 CSK Schedule: ஐபிஎல் 2026ன் முதல் கட்டத்தின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் கட்ட அட்டவணையில் 4 போட்டிகளில் விளையாட இருக்கிறது. வருகின்ற 2026 மார்ச் 30ம் தேதி கவுகாத்தியில் நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிரான முதல் போட்டியுடன் சென்னை அணி ஐபிஎல் 2026ல் களமிறங்குகிறது.

IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் போட்டி எப்போது? எந்த 4 அணிகளுடன் மோதுகிறது?
சென்னை சூப்பர் கிங்ஸ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Mar 2026 08:00 AM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) அட்டவணை அறிவிப்பதற்கு முன்னதாகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 நாட்களுக்கு மேலாக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் உள்ளிட்ட பல வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியில் சிவம் துபே, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பயிற்சி முகாமில் இணையவுள்ளனர். சஞ்சு சாம்சனும், எம்.எஸ்.தோனியும் ஒன்றாக களமிறங்குவதை காண சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த ஐபிஎல் 2026 சீசனில் சென்னை அணி தனது முதல் போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிராக விளையாட இருக்கிறது.

ALSO READ: ஐபிஎல்லில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா தோனி..? சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்!

சிஎஸ்கே அணியின் முதல் போட்டி எப்போது..?

ஐபிஎல் 2026ன் முதல் கட்டத்தின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் கட்ட அட்டவணையில் 4 போட்டிகளில் விளையாட இருக்கிறது. வருகின்ற 2026 மார்ச் 30ம் தேதி கவுகாத்தியில் நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிரான முதல் போட்டியுடன் சென்னை அணி ஐபிஎல் 2026ல் களமிறங்குகிறது. அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் நான்கு போட்டிகளுக்கான அட்டவணை:

  • முதல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், 2026 மார்ச் 30 – கவுகாத்தி (இந்திய நேரப்படி மாலை 7.30 மணி)
  • 2வது போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், 2026 ஏப்ரல் 3 – சென்னை (இந்திய நேரப்படி மாலை 7.30 மணி)
  • 3வது போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், 2026 ஏப்ரல் 5 – பெங்களூரு (இந்திய நேரப்படி மாலை 7.30 மணி)
  • 4வது போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், 2026 ஏப்ரல் 11 – சென்னை (இந்திய நேரப்படி மாலை 7.30 மணி)

ALSO READ: வெளியான ஐபிஎல் 2026 அட்டவணை.. முதல் போட்டியில் மோதும் பெங்களூரு – ஹைதராபாத்

ஐபிஎல் 2026க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), உர்வில் பட்டேல் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், குர்ஜாப்னீஸ் சிங், நாதன் எல்லீஸ், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சௌத்ரி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்) (வர்த்தகம்).

Follow Us