தியேட்டரில் ஹிட் அடித்த பறந்து போ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!
Paranthu Po Movie OTT Update: இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் பறந்து போ. இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராம் (Director Ram) இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பறந்து போ. நடிகர் சித்தார்த்தின் 3 BHK, சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ் ஆகிய படங்களுடன் கடந்த 4-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவா (Actor Shiva) நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகர்கள் கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரயான், அஜு வர்கீஸ், அஞ்சலி, பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், ஸ்ரீஜா ரவி, ஜெஸ் குக்கு, தேஜு அஸ்வினி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பறந்து போ படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து அமைத்துள்ளனர். படத்தில் சின்ன சின்னதாக பல பாடல்கள் படத்தின் காட்சிகளுக்கு இடையே ஒலிபரப்பப்பட்டது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வெளியாகி இரண்டு வாரங்களே ஆன நிலையில் படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




இயக்குநர் ராமின் பறந்து போ படத்தின் கதை என்ன?
தொடர்ந்து தனது படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குநர் ராம் இந்த படத்தில் முழுக்க முழுக்க காமெடியை கொடுத்து ரசிகர்களை சிரிப்பு அழையில் மூழ்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள 90ஸ் கிட்ஸ்கள் பெற்றோர்களாக மாறி எப்படி இருக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி இருந்தது.
8 வயது சிறுவனின் பெற்றோர் அந்த சிறுவனின் குறும்பு தனங்களையும், தங்களின் பொருளாதார சிக்களையும் எப்படி ஒரே நேரத்தில் சமாளிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்து காட்டியுள்ளார் இயக்குநர் ராம். வாழ்க்கையின் தரத்தை உயர்த்த போராடும் இளம் பெற்றோர் அந்த போராட்டத்திற்கு இடையே தனது பையனை எப்படி வளர்க்கிறார்கள், அதனால் அவர்கள் என்னென்ன விசங்களை கடக்கிறார்கள் என்பது இந்தப் படம் மிகவும் அழகாக காட்டியுள்ளது.
தொடர்ந்து பிசியான வாழ்க்கையில் இருக்கும் தந்தை தனது 8 வயது மகனுடன் எதிர்பாராத விதமாக ஒரு ரோட் ட்ரிப் செல்லவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அந்த பயணத்தை விரும்பும் அந்த சிறுவன் வழியில் எப்படி எல்லாம் குறும்புகள் செய்கிறான் என்பதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
பறந்து போ படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
OUT NOW! #DirectorRam’s #ParanthuPo Teaser – https://t.co/1m13SG5iTo@actorshiva #graceantony @yoursanjali @AjuVarghesee @DhayaSandy @madhankarky @iamvijayyesudas @mynameisraahul @Romeopictures_ @thinkmusicindia @JioHotstartam @SureshChandraa @AbdulNassarOffl @donechannel1
— Shiva (@actorshiva) June 4, 2025