Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

HBD Yogi Babu: காமெடியனாகவும், நாயகனாகவும் ஜொலிக்கும் நடிகர் யோகி பாபுவிற்கு ஹேப்பி பர்த்டே!

Actor Yogi Babu Birthday: தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்தியா சினிமா அளவில் தனது நடிப்புத் திறமையால் கொடிக்கட்டிப் பறப்பவர் நடிகர் யோகி பாபு. காமெடியன், நாயகன், குணச்சித்திர நடிகர் என பண்முகத்தன்மை கொண்ட நடிகர் யோகி பாபு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

HBD Yogi Babu: காமெடியனாகவும், நாயகனாகவும் ஜொலிக்கும் நடிகர் யோகி பாபுவிற்கு ஹேப்பி பர்த்டே!
நடிகர் யோகி பாபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jul 2025 12:05 PM

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் யோகி பாபு (Actor Yogi Babu) இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நன்கு பரிச்சையம் ஆனார். இந்தப் படத்தில் தனக்கு என்று ஒரு கதாப்பாத்திரம் கிடைத்ததால் தனது பெயருக்கு முன்பு யோகி என்ற படத்தின் பெயரை இணைத்து தனது பெயரை யோகி பாபு என்று மாற்றிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களிடையேயும் யோகி பாபு என்ற பெயருடனே வலம் வரத் தொடங்கினார். தொடர்ந்து சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த நடிகர் யோகி பாபுவிற்கு சினிமாவில் திருப்பு முனையாக அமைந்த படம் தான் யாமிருக்க பயமே.

2014-ம் ஆண்டு வெளியான யாமிருக்க பயமே படத்தில் நடிகர் யோகி பாபு பன்னி மூஞ்சி வாயன் என்ற காமெடியால் தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இவரது சினிமா வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தி சென்றது என்றே சொல்லலாம்.

நடிகர் யோகி பாபுவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Babu V (@yogiibabuorginal)

முன்னணி நடிகர்களின் படங்களில் பட்டையை கிளப்பிய யோகி பாபு:

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிலம்பரசன், ரவி மோகன், பிரதீப் ரங்கநாதன் என பலருடன் இணைந்து நடித்துள்ளார். இது மட்டும் இன்றி பாலிவுட்டில் நடிகர் ஷாருக் கான் உடனும் இணைந்து நடிகர் யோகி பாபு நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

படங்களில் எந்த நாயகன் அல்லது நாயகி நடிக்கிறார் என்பதை முடிவு செய்யும் முன்பே அந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கிறாரா என்பதை படக்குழு உறுதி செய்யும் அளவிற்கு தன்னை சினிமாவில் சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார் நடிகர் யோகி பாபு.

Also Read… கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ஹம்சினி என்டர்டெயின்மென்ட்!

காமெடியன் டூ கலக்கல் நாயகன் நடிகர் யோகி பாபு:

நடிகர் யோகி பாபு காமெடியனாக மட்டும் இன்றி கதையின் நாயகனகாவும் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக சில காமெடி நடிகர்கள் நாயகனாக அறிமுகம் ஆன பிறகு அவர்கள் மீண்டும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் நடிகர் யோகி பாபு தான் கதையின் நாயகனாக நடித்தாலும் காமெடி கதாப்பாத்திரங்களை தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் நடித்து வருகிறார்.

காமெடி நாயகன் என தொடர்ந்து நடித்து வரும் நடிகர் யோகி பாபு இன்று 23-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… தியேட்டரில் ஹிட் அடித்த பறந்து போ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்!