கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த ஹம்சினி என்டர்டெயின்மென்ட்!
Coolie Movie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படம் குறித்து முக்கிய அறிவிப்பை பிரபல விநியோக நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் படத்தில் இருந்து முன்னதாக இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து மூன்றாவது பாடலை நாளை 22-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் வெளியீட்டு விழா நாளை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூலி படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் விநியோக உரிமைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் மிகவும் விறுவிறுப்பாக விற்பனை ஆகி வருகின்றது. இந்த நிலையில் கூலி படத்தின் சர்வதேச விநியோகம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




சர்வதேச அளவில் சாதனைப் படைக்க காத்திருக்கும் கூலி படம்:
சர்வதேச அளவில் இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பிரபல ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம். இந்த ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பான் இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் உருவாகும் படங்களை உலக அளவில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
அதன்படி இந்த ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நடிகர்கள் விஜய், ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் படங்களை உலக அளவில் வெளியிட்டு முன்பு பல சாதனைகளை படைத்துள்ளது. இந்த நிலையில் அந்த சாதனைகளை முறியடிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தை சுமார் 100க்கும் மேற்பட்ட நாடிகளில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பரவி வந்தது.
இந்த தகவல்களை உறுதி செய்யும் விதமாக தற்போது ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாம் அமைதியாகக் உருவாக்கி வந்தவை தற்போது சத்தம் போடப் போகின்றன. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் வெளிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள்னர்.
கூலி படம் குறித்து ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
What we’ve been building in silence is about to make noise.
Locked in secrecy. Revealing very soon.#CoolieStay tuned with #HamsiniEntertainment #CoolieFromAug14 #SuperstarRajinikanth @Dir_Lokesh @sunpictures pic.twitter.com/NKNwBIipxR
— Hamsini Entertainment (@Hamsinient) July 21, 2025