இந்தியன் 3 படத்திற்கு சம்பளம் இல்லாமல் முடித்துக்கொடுக்கும் கமல் மற்றும் ஷங்கர்… ரிலீஸிற்கு தயாராகும் படக்குழு!
Indian 3 Movie Update: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் இந்தியன் 3. இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாக படம் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இயக்குநர் சங்கர் (Director Shankar) இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் இந்தியன். சுதந்திர போராட்ட தியாகியாக இருக்கும் கமல் ஹாசன் சுதந்திரத்திற்கு பிறகு அரசு அலுவலகங்களிலும், அரசியல்வாதிகளிடையே இருக்கும் ஊழலை எதிர்க்கும் இந்தியன் தாத்தாவாக நடித்து இருந்தார். ஒரு கட்டத்தில் ஊழலில் ஈடுபடும் தனது மகனையே கொலைசெய்யும் அளவிற்கு சென்றுவிடுவார் இந்தியன் தாத்தாவான கமல் ஹாசன். இதன் காரணமாகவே இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத இந்தியன் 2 படம்:
இந்தியன் படத்தின் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது இந்தியன் 2 படம். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. திரைக்கதை, வசனம் என அனைத்தும் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்ததாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் படம் வெளியான பிறகு இணையத்தில் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 3 குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்:
Witness the epic love tale between
Veerasekaran balaram and dhakshayini♥️ 💘A piece of love in between the war ridden era! 🇮🇳⚔️♥️@ikamalhaasan@shankarshanmugh @LycaProductions @RedGiantMovies_ @MsKajalAggarwal@Shyam_Prasad_KR pic.twitter.com/gCcWfOZ30k
— SOUTH FIRST (@sai_ssr1) July 21, 2025
இணையத்தில் வைரலாகும் இந்தியன் 3 படத்தின் அப்டேட்:
இரண்டாம் பாகம் படுதோல்வியை அடைந்த நிலையில் 3 பாகத்தின் மீது ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது. மேலும் படம் வெளியாகுமா இல்லையா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்த நிலையில் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அதன்படி இந்தப் படத்திற்கு இயக்குநர் சங்கர் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இருவரும் சம்பளம் வாங்காமலே படத்தை முடித்துக் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படத்தை வெளியிடு பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அதன்படி படம் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.