Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Love Insurance Kompany : பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா ?

Love Insurance Kompany Release Date Delay : தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் படம்தான். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படம் வரும் 2025, செப்டம்பர் 18ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டநிலையில், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாகத் தகவல்.

Love Insurance Kompany : பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா ?
லவ் இன்சூரன்ஸ் கம்பெனிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Jul 2025 15:52 PM

இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில் தமிழில் உருவாகியிருக்கும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த திரைப்படமானது நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) ஹீரோவாக நடித்திருக்கும் 3வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, நடிகை கீர்த்தி ஷெட்டி (Kirthi Shetty) முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லவ் இன்சூரன்ஸ் படத்தின்  டைட்டில் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் எழுந்து வந்தது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூன் ஆரம்பத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு வெளியிட்டிருந்தது. வரும் 2025ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸை படக்குழு ஒத்திவைப்பதற்குத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்துடன், வெளியிடப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாள்.. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி பதிவு :

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ரிலீஸ் ஒத்திவைப்பிற்குக் காரணம் :

நடிகர் பிரதீப் ரங்கநாதத்தின் 3வது திரைப்படமாக இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் 2025 செப்டம்பர் 18ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல்கள் வைரல். இந்நிலையில், இப்படத்தின் ரிலீசிற்கு அடுத்த மாதம் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதனின் டியூட் படமும் வெளியாகிறதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : காந்தா படம்.. துல்கர் சல்மானுக்காக ரிஸ்க் எடுத்த நடிகர் ராணா டகுபதி!

இந்நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் படம் வெளியாகவுள்ள நிலையில்தான், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கிராபிக்ஸ் எடிட்டிங்கிற்கு டைம் அதிகம் எடுப்பதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைத்ததாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டியூட் திரைப்படம் :

பிரதீப் ரங்கநாதனின் இந்த படத்தை, அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கிவருகிறார். இவர்களின் கூட்டணியில் உருவாகிவரும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் லீட் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து வருகிறார். இப்படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கும் நிலையில், வரும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.