Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கருப்பன் வரான் வழி மறிக்காதே… சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் கருப்பு படத்தின் டீசர்!

Karuppu Movie Teaser: நடிகர் சூர்யா தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் அவரது படங்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் அவரது 45-வது படமான கருப்பு படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கருப்பன் வரான் வழி மறிக்காதே… சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் கருப்பு படத்தின் டீசர்!
கருப்புImage Source: twitter
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jul 2025 19:21 PM

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு. சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் இந்த கருப்பு படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியுடன் கூட்டணி வைத்தது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான அனைத்தும் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்ததுதான். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அன்று சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் கருப்பு படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கருப்பு படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஆர்.ஜே.பாலாஜி – சூர்யா கூட்டணியில் உருவாகும் கருப்பு படம்:

நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகியுள்ளது கருப்பு. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து படத்தின் அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது. முன்னதாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்ததாக படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படம் நிச்சயமாக பண்டிகை நாளில் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.