Silambarasan: ஷூட்டிங்கில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர்.. உதவிக்கரம் நீட்டிய சிலம்பரசன்!
Silambarasan Helped Stunt Master Mohanraj Family : கோலிவுட் சினிமாவில் சமீபத்தில் அனைவரையும் உலுக்கிய சம்பவம்தான், வேட்டுவம் பட ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு. இவரின் இறப்பிற்கு திரையுலகினர் பலரும், இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சிலம்பரசன், மோகன்ராஜ் குடும்பத்திற்கு உதவியுள்ளார். இது குறித்து தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தற்போது வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான தக் லைப் படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம் என்றால் அது வேட்டுவம் (Vettuvam)பட ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜின் (Stunt master Mohanraj) மரணம் தான். இவர் வேட்டுவம் படத்தின் கார் கிராஷ் காட்சியின்போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு மோகன் ராஜ் உயிரிழந்தார். பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி ஸ்டண்ட் செய்திருந்தாலும், எதிர்பாராத விதமாக அவர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் (Pa. Ranjith) மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். மேலும் மோகன் ராஜின் உயிரிழப்பிற்குப் பின், சினிமாவின் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கும், ஸ்டண்ட் செய்வதற்கு புதிய விதிமுறைகளை அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.




உதவிக்கரம் நீட்டிய சிலம்பரசன்
இந்நிலையில் மறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜின் குடும்பத்திற்கு, நடிகர் சிலம்பரசன் உதவியுள்ளார். இந்த தகவலானது சிலம்பரசன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இப்படியான நிலையில் சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, ”நடிகர் சிலம்பரசன் மறைந்த ஸ்டண்ட் நடிகர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்” என தெரிவித்திருந்தார்.
மேலும் நடிகர் சிலம்பரசன் இதுபோல பல்வேறு உதவிகளை பெரிதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வழங்கி வருகிறார் எனவும் திரைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சிலம்பரசன் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க : காந்தா படம்.. துல்கர் சல்மானுக்காக ரிஸ்க் எடுத்த நடிகர் ராணா டகுபதி!
சிலம்பரசன் உதவி பற்றிப் பேசிய வீடியோ :
#SilambarasanTR donated ₹1 lakh to stunt choreographer #MohanRaj family who lost his life during Vettuvam shoot👏 pic.twitter.com/FJx7KAwbNF
— AmuthaBharathi (@CinemaWithAB) July 21, 2025
சிலம்பரசனின் புதிய திரைப்படங்கள் :
நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் இறுதியாக வெளியான தக் லைஃப் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதை அடுத்ததாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவிருந்த, STR 49 படமானது சில பிரச்சனைகளின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை அடுத்ததாக வெற்றிமாறனுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். மேலும் STR 50 மற்றும் 51 போன்ற படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படிங்க : பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவிய சிவகார்த்திகேயன்!
வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணி :
இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் சிலம்பரசன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படமானது தனுஷின் வட சென்னை படத்தின், யுனிவர்ஸ் கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாம். இந்த படத்தில் சிலம்பரசன் முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் நடிகர் கே. மணிகண்டனும் இணைந்து நடிக்கவிருப்பதாக்கவும், கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இதை இயக்குநர் வெற்றிமாறன் நேர்காணலில் உறுதிப் படுத்தியிருந்தார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.