Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan : பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyans Help To The Muthukumar Family : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்றிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், நா.முத்துக்குமார் குடும்பத்திற்குச் செய்த விஷயம் பற்றி ஓபனாக கூறியுள்ளார்.

Sivakarthikeyan : பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் மற்றும் நா முத்துக்குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Jul 2025 16:30 PM

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan)தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி (Parasakthi) படத்தின் ஷூட்டிங்கானது மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபகாலமாகப் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று 2025 ஜூலை 19ம் தேதியில், மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் (Na Muthukumar) 50வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் (Chennai) நடைபெற்ற “ஆனந்த யாழை” (Anantha yazhai) என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பற்றிப் பேசியிருந்தார். மேலும் அவர் தான் பாடலாசிரியராக ஒரு பாடலை எழுதி, அந்த பாடலுக்குக் கிடைத்த சம்பளத்தை, நா முத்துக்குமார் குடும்பத்திற்கு அளிப்பது தனது கடமை என்று கூறியுள்ளார். இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் ‘கில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ஆனந்த யாழை நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் பின் மேடையில் பேசியிருந்தார். அதில் அவர், “என்னை முதலில் இயக்குநர் நெல்சன் பாடல் எழுத சொல்லும்போது, நான் ஜாலியான பாடலைத்தான் எழுதினேன். ஆனால் அந்த பாடலின் வரிகளில் எந்த அர்த்தமும், இல்லை ஆனால் அந்த வேலை அர்த்தமாகவேண்டும் என நினைத்தேன். அந்த பாடலை நான் எழுதியபோது, எனக்கு காசு கொடுங்க, எனக்குப் பாடலாசிரியர்க்கு அது தேவையாக இருக்கிறது, அவரிடம் கொடுக்கவேண்டும் எனக் கூறினேன். அவர்தான் நா.முத்துக்குமார் சார்.

இதையும் படிங்க : அனுஷ்காவின் ‘காதி’ படத்துடன் மோதும் ராஷ்மிகாவின் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ ?

அவருக்குத்தான் நான் பாடலாசிரியராக எழுதிய முதல் பாடலின் சம்பளத்தைக் கொடுத்தேன், அது எனது உதவி இல்லை, நான் செய்யவேண்டிய கடமை. அவர் பாடலாசிரியராக பல்வேறு விதமான விஷயங்களை மக்களுக்கும், சினிமாவிற்கு கொடுத்துட்டு போயிருக்காரு. இந்த ஆனந்தயாழை என்ற நிகழ்வும் அவருக்கு நான் செய்யவேண்டிய கடமையாக அவருக்கு, கொடுக்கும் மரியாதையாக செய்த விஷயம்தான்” என நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ :

சிவகார்த்திகேயனின் புதிய படங்கள் :

மதராஸி மற்றும் பராசக்தி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் புதிய படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். குட் நைட் பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரின் இயக்கத்தில் எஸ்கே 24 திரைப்படத்திலும், இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்திலும் இணையவுள்ளார். இந்த படங்களைப் பற்றிய இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை . விரைவில் இதை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.