Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் மதராஸி டைட்டிலில் மாற்றம்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
Sivakarthikeyans Movie Title Change Update : நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் மதராஸி. இந்த படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, அதில் படத்தின் டைட்டிலை மாற்றம் செய்துள்ளது. அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் அமரன் (Amaran) திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வருகிறார். அவ்வாறு ஆரம்பத்தில் எஸ்கே 23 (SK23) என அறிவிக்கப்பட்ட திரைப்படம் மதராஸி (Madharasi). இந்த படத்தை தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கிவருகிறார். இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இந்தியில் சிக்கந்தர் படத்தில் பிசியாக இருந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமானது என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாகப் பிரபல கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பானது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகச் சொல்லும் நிலையில், நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளாராம். மேலும் மதராஸி படமானது இன்னும் 50 நாளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இப்படமானது ஆரம்பத்தில் ” Madharasi” என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய போஸ்டரில் “Madharaasi” எனப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியில் இப்படத்தின் டைட்டில் “தில் மதராஸி” (Dil Madharaasi) என வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : மீண்டும் ‘ப்ரீடம்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. சோகத்தில் ரசிகர்கள்!
மதராஸி படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர் பதிவு :
They try to silence him.
But he comes out with the loudest roar ever heard!🔥50 Days to go – #Madharaasi in theatres from September 5💥💥
Sensational updates soon.. stay tuned!#DilMadharaasi#SKxARM #SK23@SriLakshmiMovie @Siva_Kartikeyan @ARMurugadoss @anirudhofficial… pic.twitter.com/Pm5cOSlbLn— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) July 17, 2025
மதராஸி திரைப்படத்தின் கதைக்களம் என்ன :
இந்த மதராஸி படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சல்மான்கானின் சிக்கந்தர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தின் கதையைப் பற்றி ஓபனாக பேசியிருந்தார். அதில் அவர், “மதராஸி திரைப்படத்தின் கதையானது துப்பாக்கி மற்றும் கஜினி திரைப்படத்தின் கலவையான கதையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில், இப்படமானது காதல், ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி சண்டைகள் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கூலி படத்தின் 3வது பாடல் எப்போது? படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!
சிவகார்த்திகேயனின் புதிய படங்கள் :
மதராஸி படத்தை அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவருகிறார். இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்தாக இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளாராம் . இப்படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் இயக்கத்திலும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.