Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Nivin Pauly : ‘பென்ஸ்’ பட நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப் பதிவு!

Financial Fraud Case Registered Against Nivin Pauly : பிரபல மலையாளம் மற்றும் தமிழ் நடிகர்களில் ஒருவர்தான் நிவின் பாலி. இவர் தென்னிந்தியப் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் மஹாவீர்யர் படத் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் பெயரில், நிவின் பாலி மற்றும் அப்படத்தின் இயக்குநர் அப்ரிதி ஷைன் என இருவர் மீது மோசடி வழக்குப் பதிவாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nivin Pauly : ‘பென்ஸ்’ பட நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப் பதிவு!
நடிகர் நிவின் பாலி மற்றும் அப்ரிதி ஷைன் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 17 Jul 2025 17:44 PM

நடிகர் நிவின் பாலி (Nivin Pauly) தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் மலையாளி பிரம் இந்தியா (Malayalee From India). இந்த படமானது இவருக்குக் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகை நயன்தாராவுடன் டியர் ஸ்டூடன்ட்ஸ் (Dear Students) என்ற படத்தில் நடித்தது வந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கும் சமீபத்தில் நிறைவடைந்திருந்தது. இதை அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் (Benz) படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் பெயரில், நடிகர் நிவின் பாலியின் மீது மோசடி புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு வெளியான மஹாவீர்யர் (Mahaveeryar) என்ற படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த புகாரின் பெயரில் பெயரில், நடிகர் நிவின் பாலி மற்றும் மஹாவீர்யர் படத்தின் இயக்குநர் அப்ரிதி ஷைன் (Abrid Shine) என இருவரின் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிவின் பாலியின் மீது மோசடி வழங்கி பதிவிற்கு காரணம் :

கடந்த 2022ம் ஆண்டு நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிதி ஷைன் கூட்டணியில் வெளியான படம் மஹாவீர்யர் என்ற திரைப்படம். இந்த படமானது வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுப் படு தோல்வியடைந்திருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளராக நடிகர் நிவின் பாலி, இயக்குநர் அப்ரிதி மற்றும் தயாரிப்பாளர் பி.எஸ். ஷம்னாஸ் என மூவரும் இணைந்து தயாரித்திருந்தனர்

இதையும் படிங்க :  ஃபகத் பாசில் வைத்திருக்கும் 17 வருட பழைய போன்.. அதன் விலை இத்தனை லட்சமா?

இந்நிலையில் தயாரிப்பாளர் பி.எஸ். ஷம்னாஸ், இந்தப் படத்தின் தயாரிப்பு தொடர்பாக அவருக்கு சுமார் ரூ.95 லட்சம் சம்பளம் வழங்க உள்ளதாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்ரித் ஷைன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரிக்கும் ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜு 2’ படத்தில் தயாரிப்பு கூட்டாளியாக இருக்க,  சுமார் ரூ.1.90 கோடி சம்பளம் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைன், அவர்கள் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக்கக் கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினரிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, இன்னும் எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ்.. ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு!

நிவின் பாலியின் பென்ஸ் திரைப்படம் :

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் முன்னணி நாயகனாக நடிக்கும் பென்ஸ் படத்தில், நடிகர் நிவின் பாலி வால்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொகுப்பில் ஒரு பாகமாக இப்படம் உருவாகி வருகியது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் படத்தை இயக்கிவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 4 மாதங்களில் நிறுவடைந்துவிடும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.