Lokesh Kanagaraj: நான் ஜீனியஸ் இல்ல… சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி!
Lokesh Kanagaraj Respond Sanjay Dutts Criticism : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய்யின் கூட்டணியில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் லியோ. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கவில்லை என நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் லோகேஷ் கனகராஜைச் சாடியிருந்தார். இந்நிலையில், அதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பதில் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதை பற்றிப் பார்க்கலாம்.

நடிகர் தளபதி விஜய்யின் (Thalapathi Vijay) முன்னணி நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் லியோ (Leo). இந்த படத்தைத் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். இந்த படமானது போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதற்கான நடக்கும் கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாகியிருந்தது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். மேலும் முக்கிய வில்லனாக நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகர் அர்ஜுன் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் கன்னட திரைப்படமான கேடி (KD) என்ற படத்தின் ப்ரோமோஷன் பணி தொடர்பாக, நடிகர் சஞ்சய் தத் (Sanjay Dutt) சென்னைக்கு வந்திருந்தார்.
அதில் பேசிய அவர், “லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை வீணடித்துவிட்டார், அவர் எனக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை” எனக் கூறியிருந்தார். இது மக்கள் மத்தில் படு வைரலான நிலையில், தற்போது சஞ்சய் தத்தின் கருத்திற்கு லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.




இதையும் படங்க : கூலி பட ட்ரெய்லர் எப்போது? -லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் கொடுத்த விளக்கம் :
சமீபத்தில் கூலி படத்தின் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், அதில் நடிகர் சஞ்சய் தத் பற்றிப் பேசியிருந்தார். அதில் அவர், “நடிகர் சஞ்சய் தத் கூறியது இணையத்தில் வைரலான நிலையில், அவர் உடனே எனக்குக் கால் பண்ணியிருந்தார். அப்போது அவர் என்னிடம் நான் நகைச்சுவையாகக் கூறியிருந்தேன், சிலபேர் அந்த விசயங்களை மாற்றி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். நான் அந்த விஷயத்தை மெதுவாகத்தான் கூறினேன். ஆனால் அது இவ்வாறு போகும் என நினைக்கவில்லை, எனக்கு அருவருப்பாக இருக்கிறது, நான் அவ்வாறு எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறியிருந்தார் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
இதையும் படங்க : ரஜினியுடன் இணையும் ‘மகாராஜா’ பட இயக்குநர்? – ரசிகர்கள் ஹேப்பி!
மேலும் பேசிய லோகேஷ், நான் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குநரோ அல்ல. நானும் எனது படங்களில் பல தவறுகளை செய்திருக்கிறேன், அதன்மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். மேலும் நிச்சயமாக இன்னொரு படத்தை நடிகர் சஞ்சய் தத்துடன் செய்வேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபனாக பேசியிருந்தார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்பட மோனிகா பாடல் :
Monica, My dear Monica! 😍
The second single #Monica from #Coolie starring @hegdepooja💃🏻 is out now!▶️ https://t.co/UHACTjGPWg#Coolie worldwide from August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #SoubinShahir @iamSandy_Off #Sublahshini @AsalKolaar @iamnagarjuna… pic.twitter.com/AnM17WjgRL
— Sun Pictures (@sunpictures) July 11, 2025
லியோ படத்தை அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படம் உருவாகியுள்ளது . ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.